சென்னை சங்கமம்

இனிய தோழர்களே,
நேற்று சென்னை சங்கமம் விழாவின் துவக்க நிகழ்ச்சியாக "சங்கே முழங்கு என்ற நிகழ்ச்சி சென்னை ஐ ஐ டி திறந்த வெளிகலை அரங்கில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இன்னும் நான்கு நாட்ட்கள் சென்னையில் மக்கள் கூடுமிடங்களில் கலையும் மாலையும் நடக்க உள்ளது. நம்ம வலைப் பதிவர் சந்திப்பு நடக்கும் நடேசன் பூங்காவில் கூட சில நிகழ்ச்சிகள் நடைபெருகிறது. அனத்திற்கும் அனுமதி இலவசம். சென்னைல்யில் உள்ள நாட்டுப்புறக் கலை ஆர்வலர்கள் இதைக் கண்டுகளியுங்கள்.
சென்ற ஆண்டு நாட்டுப் புற கலைகளுக்காக ஒரு போட்டியை நானும் எனது நண்பர் சங்கரும் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த்து நடத்தினோம். 3 அணிகள் தான் கல்ந்த்து கொண்டது. நமது நாட்டுப்புறக் கலைகல் வராலாற்ல் மட்டுமே இருந்த்துவிடுமோ என அப்பொது கவலைப் பட்டொம். அதைப் பற்றிய பதிவு ்கிழே. ஆனால் அந்த கவலை தவறானது என நேற்று
ஐ ஐ டி யில் நடந்த பிரமாண்ட விழா எடுத்துக்க்கூறியது.
இது தமிழகத்தில் நடக்கும் ஆபாசமில்லாத வக்கிரம் இல்லாத ஒரு கலை விழா. இதை ஏற்பாடு செய்த கனிமொழி, டைரக்டர் வசந்த் மற்றும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகளையும் பாராட்டுதலையும் தெரியப்படுத்துகிரேன்.

என் இனிய நண்பர்களே!

வனக்கம். என்னடா இவன் திடீர்னு குங்குமம் அட்ட படத்தை போஸ்ட் பண்ணி இருக்கான்,அதுவும் சிம்ரன் இருக்காங்க, என்ன விசயம்னு யோசிக்கரிங்களா?
மேட்டர் இருக்கு. அட்டைல இல்ல புத்தகத்துக்கு உள்ள....





மேலே உள்ள பெட்டி செய்திதான் மேட்டர், நானும் எனது நண்பர் சங்கரும் பெருமுயற்சி செய்து சாரங்-2006 ஐ.ஐ.டி கலைவிழாவில் முதன் முதலாக நமது நாட்டுப்புற கலைகளுக்காக ஒரு போட்டியை நடத்தினொம். இது நமது கலாச்சாரத்தை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்ச்சி. இது அடுத்த ஆண்டும் தொடர இதை பட்றிய விபரங்களை கல்லூரிகலில் பயிலும் உங்கள் நண்பர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.

3 Comments:

  1. ')) said...
    இந்தச் செய்தி குறித்து மிக மகிழ்ச்சி. 1989 ஆம் ஆண்டு சாரங்கில் (அப்பொழுது மார்டி கிராஸ்) ஒரு சில நண்பர்கள் இது போன்றதொரு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய முடியுமா என்று அந்த ஆண்டு நிகழ்ச்சிக் குழுவினரை அணுகினோம். அப்பொழுது அவர்கள் ஆர்வம் காட்டினாலும், பொதுவாக வெளி மாநிலத்து மாணவர்களே அதிகமாக இருந்தபடியால் அவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்காது என்று கூறினர். இதைச் சாதித்துக் காட்டிய உங்களுக்கு பாராட்டுகள். இந்தச் செய்தியை இங்கு பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    சங்கமத்துக்கும் சாரங் விழாவுக்கும் தொடர்பு இல்லை என நினைக்கிறேன். சங்கமத்தை ஏற்பாடு செய்ததில் தமிழக அரசுக்குப் பங்கு உண்டா? திரு. காஸ்பர் இராஜ் ஒருங்கிணைத்ததாகக் கேள்வியுற்றேன்.


    நன்றி - சொ. சங்கரபாண்டி
    ')) said...
    நன்றி திரு சொ. சங்கரபாண்டி , தங்கள் வருகைக்கும் வாழ்த்துகும்.
    நீங்கள் சொல்வது சரிதான் சங்கமத்துக்கும் சாரங் இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
    சங்கமம் திரு. காஸ்பர் இராஜ், கணிமொழி, இயக்குனர் வசந்த் இன்னும் பலர் முயற்சியால் ஏற்பாடு செய்யபட்டது. சுற்றுலா வளர்ச்சித்துறை உட்பட சில துறைகளின் பங்கும் இதில் உண்டு. மிக நன்றாக இருந்தது நிகழ்ச்சி.

    சென்ற ஆண்டு சாரங்கில் இருந்த நாட்டுப்புறக் கலைகளுக்கான நிகழ்ச்சி இந்த ஆண்டு இல்லை,அதுவே எனது வருத்தம். அதற்கு காரணம் போட்டியாளர்கள் இல்லை என்பதே. நமது மண்னின் கலாச்சர்த்தை பேசும் கலைகளை போற்ற ஆளில்லையே என வருதப்பட செய்தது, இந்த சங்கமம் நிகழ்ச்சி ஒரளவு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
    பெயரில்லா said...
    Visit Chennai Sangamam Official website

    Chennai Sangamam

Post a Comment






The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche