இத எப்படி நம்ம ஊரு ஸ்டைல சமைக்கிறது?
கொஸ்கொஸ்"(koos koos(அமெரிக்கன் ஸ்டைல்), kuskus(பிரிட்டிஷ் ஸ்டைல்). எப்படி உங்களௌக்கு பிரியமோ அந்த பேர வச்சிக்கோங்க. இது நம்ம ஊரு ரவை போல இருக்கும். படத்தை பாருங்க.
நெட்ல தேடுனதுல இது மொராக்கோல இருந்து வந்ததுனு போட்டிருந்தாங்க. பெரும்பாலும் கோதுமை மாவில் செய்யப்படுகிறது,ஆனால் சில வேற விதமாகவும் பார்லி, மக்காசோள மாவு இதுலயும் செய்யப்படுகிறது. எல்லா சூப்பர் மார்கெட்லயும் கிடைக்கும். இத எப்படி நம்ம ஊரு ஸ்டைல சமைக்கிறது? அதுக்குத்தான் இந்த ரெசிப்பி.தனியா சமைத்து சாப்பிடறதுல கொடுமை என்னனா?, சனிக்கிழமை காலைல சமைக்கிறதுதான். 5 நாளும் காலைல ஆபீஸ் போற அவசரத்துல காஞ்ச ரொட்டிய ஜாம் தடவி உள்ள தள்ளிட்டு ஓடிடறதால ஒன்னும் தெரியாது. சனிக்கிழமை காலைல கூட இருக்கும் நண்பர்களும் லேட்டாதான் எழுந்துப்பாங்க, நமக்கிருக்கற ஆசைக்கு சூரியன் எழுந்துக்கும் போதே எந்திரிச்சு எதாவது செஞ்சு வச்சா ஆறி அவலா போயிடும். லேட்டா எழுந்து சமைக்கனும், சூடா சுவையா இருக்கனும். சீக்கிரமா வேலயும் முடியனும். இதயெல்லாம் பூர்த்தி செய்யற மாதிரினா மாகி நூடுல்ஸ் செய்யாலாம், ஆனா வாரா வாரம் இதுவே சாப்பிட்டா வெறுத்துப் போயிடும். உப்புமா செய்யலாம் , உப்புமா எனக்கு சாப்பிட பிடிக்கும்னு சொல்ற மக்கள தேடி பிடிக்க வேண்டியதா இருக்கு. இந்த பிரச்சினைய தீர்க்க தேடிப் புடிச்சதுதான் இந்த கொஸ்கொஸ். நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க.
என்னெல்லாம் வேணும்? எதெல்லாம் இருக்கோ அதெல்லாம் பயன்படுத்தலாம்.ஒரு சின்ன லிஸ்ட்.காய்கறி:-கேரட்-2பீன்ஸ்-200 கிராம்குட மிளகாய்-1பச்சை பட்டாணி-100 கிராம்.தக்காளி-2வெங்காயம்-2.உருளைக்கிழங்கு-1காளான் - 4பச்சை மிளகாய்-2கொஸ்கொஸ்-300 கிராம்மசாலாஸ்:-மிளகாய்ப்பொடிமஞ்சள் தூள்சாம்பார் பொடிமல்லித்தூள்கொத்த மல்லி தளை,கடுகு,உழுத்தம் பருப்பு,கறிவேப்பிலை.உப்பு
எப்படி செய்யனும்?
ரொம்ப சிம்பிள், முதல்ல கெஸ்கொஸ் எடுத்து 4 ஸ்பூன் எண்ணேய், அல்லது நெய் விட்டு நல்லா பொன்நிறமாக 5-10 நிமிசம் வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். எல்லா காய்களயும் உங்களுக்கு விருப்பமான வடிவில் கட் பண்ணி வெச்சிக்கனும்.அப்புறமா ஒரு பிரையிங் பேன் வைத்து காய்ந்த்தது சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உழுந்து பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுள் கேரட்டை போட்டு நன்கு வதக்கவும், சிறிது நேரம் கழித்து பீண்ஸ்,குடமிளகாய், உருளைக்கிழங்கு, அப்புறம் பச்சை பட்டானி , வெங்காயம், தக்காளி பொட்டு எண்ணெயில் நன்றாக வதக்கவும். எவ்வளவு நேரம் வதக்கனும்னா உங்களுக்கு அரை வேக்காட்டு காய் பிடிக்கும்னா கொஞ்சநேரமே போதும், இல்லனா எல்லாக் காய்க்களும் நன்றாக வேகும் வரை வதக்கலாம். எப்படி தெரிஞுக்கிறது கேக்கறீங்களா, அப்படியே ஒரு துண்டு கேரட் எடுத்து சாப்பிட்டு பாருங்க. ஒரு தம்ப் ரூல் என்னனா மேலே இருக்கும் ஆர்டரில் போட்டிருந்தால் தக்காளி நல்லா வதங்கி, பேஸ்ட் மாதிரி மாறும் அதோட மோல் தோல் மட்டும் இருக்குமாறு ஆகும், அப்ப எல்லாக் காயுமே ஓரளவுக்கு வெந்து இருக்கும். இத செய்யும் போது அடில பிடிக்கற மாதிரி தோனுச்சினா ரெண்டு ஸ்பூன் எண்ணேய் உடனே ஊத்தனும். இப்ப தண்ணி ஊத்தனும் இதுல. எவ்வளவு? ஒரு கப் கொஸ்கொஸ் செய்ய இரண்டு கப் தண்ணி ஊத்தனும். நல்லா வதக்கிய காய்கறில தண்ணிய ஊத்தி மிளகாய் பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள் , சாம்பார் பொடி, வாசனையா வேணும்னா அதுக்கு தேவையானதுனு எல்லாம் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடனும். நல்லா கொதிச்சி வரும்போது வறுத்து வச்சிருக்கற கொஸ்கொஸ் கொஞ்சம் கொஞ்சமா கொட்டி தண்ணீர் சுண்டும் வரை கிளரி, இறக்கினால் சுவையான கொஸ்கொஸ் ரெடி. என்ன ரெசிப்பி ஓகேயா?.
பெருசா இது ஒன்னும் இல்லங்க. ரவா உப்புமா செய்யற மாதிரிதான் இதும். ரவைக்கு பதிலா கொஸ்கொஸ், கூட கொஞ்சம் வெஜிடபில்ஸ் அவ்வளவுதான். வேகமா செஞ்சா 30 நிமிசம். மெதுவா செஞ்சா ஒரு மணி நேரத்துல முடிச்சிடலாம். எப்படி சாபிடனும்? எதுக்கும் உங்க நலம் விரும்பிகள் கிட்ட சோதனை செஞ்சு பாத்தப்புறமா நீங்க சாப்பிடுங்க. :)
லேபிள்கள்: சமையல்
9 Comments:
Friedrich Nietzsche
நன்றி
இதை எப்படி நான் வெஜ் ஆக்குவது?
//"அருமையான செய்முறை விஜி.புதிதாக இருக்கே!!! செய்துபார்த்துவிட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் :)"/
ம் வெயிட்டிங் பார் ரிசல்ட்ஸ்
//"தொடர்து எழுத வேண்டும் விஜி..இது வேண்டுகோள் :) "//
எழுதிடலாம். அதவிட வேற வேலை
//"கேட்க மறந்த கேள்வி:
இதை எப்படி நான் வெஜ் ஆக்குவது?"//
நான் வெஜ் ஆக்கனும்னா , இந்த பர்க்கருக்கு இடையில வைப்பாங்களே சிக்கன் பீஸ், அத சின்ன சின்னதா கட் பண்ணி சேர்க்கலாம். இல்லனா கடல் உணவுல மியுல் னு ஒன்னு கிடைக்கும், அதை இதோட சேத்தா நல்லா இருக்கும்.
Puthu vethama Uppuma(kooskoos), nalla irukku. I like uppuma. Congrats for being August Star:) keep writing viji.
நன்றி ஜீவன்
enda ipadi technologya kola panringa.. idhan un ulagamada?
அடுத்து இதை மரோக்கர்கள் ஆவியில் வேகவைப்பார்கள்.சிலர் இதற்குள்னேரடியாக சுடுநீரை சேர்த்து மூடி வத்து விடுவார்கள்.இது சுலபம்.
அடுத்து இதன் உண்மையான முறை மரோக்கர்கள் செய்வது என்னவென்றால் இதற்கு பிரத்தியேகமாக ஒரு சோஸ் தயாரிப்பார்கள்.மட்டன் அல்லது சிக்கன் பெரிய துண்டுகளாக வெட்டியது,SELERI,NAVET,Zucchini ,onion,carot,chickpeas ,என்பவற்றை வேகவைத்து அதற்குள் டொமாட் பேஸ்ட்,மிளகாய் பேஸ்ட் இரண்டையும் சேர்த்து கடும் சிகப்பு கலரில் ஒரு சோஸ் செய்து அதனுடன் தான் சாப்பிடுவார்கள்.குஸ் குஸ் ரெஸ்ரோரண்ட் களிலும் இப்படித்தான் பரிமாறுவார்கள்.யாருக்கும் தேவைப்படின் இதன் சரியான தயாரிப்பு முறையை பரிமாறத்தயாராக இருக்கிறேன்.
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...