வான் கோழி பிரை ஒரு முன்குறிப்பு:- இது பேச்சிலர்ஸ் சமையல் டிப். அதனால ஏன் இந்த பொருட்கள் எல்லாம் தேவை, ஏன் இப்படி செய்ய வேண்டும் என ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம். இப்படியும் செய்யலாம். தேவையான பொருட்கள்:- வான்கோழி கறி ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்ல வான்கோழி மீட் எலும்பில்லாம கட் பண்ணின பேக் கிடைக்கும்) பெரிய வெங்காயம்-2 இஞ்சி, பூண்டு நறுக்கியது- சிரிதளவு(இஞ்சி பூண்டு பேஸ்ட் இருந்தால் உபயோகிக்கலாம்) சைனா சாஸ்- 2 ஸ்பூன்.(சாஸ் இருந்தா அது மட்டும் போதும் , இல்லனா சிக்கன் பிரைக்கு என்ன வாசனப் பொருள் சேக்கனுமோ அதெல்லாம் இதுலயும் உபயோகிக்கலாம்) சிக்கன் மசாலா- 2 ஸ்பூன்உப்பு தெவையான அளவு.கறிவேப்பிலை, கொத்தமல்லி தளை இருந்தா உபயொகப்படுத்தலாம் இல்லனா கொத்தமைல்லி , கறிவேப்பிலை பொடி உபயோகப் படுத்தலாம்.செய்முறை:- முதலில் வெங்காயம் இஞ்சி பூண்டை படத்தில் காட்டியுள்ள படி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்[img]http://i10.tinypic.com/433k2mt.jpg[/img] வான்கோழி இறைச்சியை சிறு துண்டுகலாக நறுக்கவும். கடையில் அந்த இறச்சி பிரட் துண்டுகள் போல கிடைக்கும், அதை அப்படியே சிறு துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.அடுப்பில் பிரையிங் பேன் வைத்து சூடக்கி அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கரிவேப்பிலை போட்டு அதனுடன் வெட்டிய வெங்காயம், இஞ்சி பூண்டு மசாலா items சேர்த்து வதக்கவும். சிறிது நேரத்திற்குப் பின் வான்கோழி இறச்சியையும் சேர்த்து நன்றாக மிதமான சூட்டில் வ்தக்கவேண்டும்.[img]http://i12.tinypic.com/2dm59if.jpg[/img]சிறிது நேரம் கழித்து படத்தில் காட்டிய பக்குவதிற்கு வ்ந்தவுடன் அதில் சைனா சாஸ் சேர்க்க வேண்டும்.பின் மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடம் வறுத்து கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இரக்கவும். இதுவே கிரேவி போல வேண்டுமெனில் சிறிது அர்சி மற்றும் சோள மாவு தண்ணீரில் கலந்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடலாம்.[img]http://i10.tinypic.com/2hp3vrd.jpg[/img]
லேபிள்கள்: சமையல்
2 Comments:
Friedrich Nietzsche
தேடிச்சோறு நிதன் தின்று வீழ்வேனோன்னு பதிவுத் தலைப்புல சொல்லிட்டு சமையல் குறிப்பா தர்றீங்க ;)
தொடர்ந்து எழுதுங்க. பயனுள்ள சமையல் குறிப்புகள்
முன் குறிப்புக்கு - ;)
தேடிச்சோறு நிதன் தின்று வீழ்வேனோன்னு பதிவுத் தலைப்புல சொல்லிட்டு சமையல் குறிப்பா தர்றீங்க ;)
தொடர்ந்து எழுதுங்க. பயனுள்ள சமையல் குறிப்புகள்//"
:) thanks