கொஸ்கொஸ்

இத எப்படி நம்ம ஊரு ஸ்டைல சமைக்கிறது?





கொஸ்கொஸ்"(koos koos(அமெரிக்கன் ஸ்டைல்), kuskus(பிரிட்டிஷ் ஸ்டைல்). எப்படி உங்களௌக்கு பிரியமோ அந்த பேர வச்சிக்கோங்க. இது நம்ம ஊரு ரவை போல இருக்கும். படத்தை பாருங்க.











நெட்ல தேடுனதுல இது மொராக்கோல இருந்து வந்ததுனு போட்டிருந்தாங்க. பெரும்பாலும் கோதுமை மாவில் செய்யப்படுகிறது,ஆனால் சில வேற விதமாகவும் பார்லி, மக்காசோள மாவு இதுலயும் செய்யப்படுகிறது. எல்லா சூப்பர் மார்கெட்லயும் கிடைக்கும். இத எப்படி நம்ம ஊரு ஸ்டைல சமைக்கிறது? அதுக்குத்தான் இந்த ரெசிப்பி.தனியா சமைத்து சாப்பிடறதுல கொடுமை என்னனா?, சனிக்கிழமை காலைல சமைக்கிறதுதான். 5 நாளும் காலைல ஆபீஸ் போற அவசரத்துல காஞ்ச ரொட்டிய ஜாம் தடவி உள்ள தள்ளிட்டு ஓடிடறதால ஒன்னும் தெரியாது. சனிக்கிழமை காலைல கூட இருக்கும் நண்பர்களும் லேட்டாதான் எழுந்துப்பாங்க, நமக்கிருக்கற ஆசைக்கு சூரியன் எழுந்துக்கும் போதே எந்திரிச்சு எதாவது செஞ்சு வச்சா ஆறி அவலா போயிடும். லேட்டா எழுந்து சமைக்கனும், சூடா சுவையா இருக்கனும். சீக்கிரமா வேலயும் முடியனும். இதயெல்லாம் பூர்த்தி செய்யற மாதிரினா மாகி நூடுல்ஸ் செய்யாலாம், ஆனா வாரா வாரம் இதுவே சாப்பிட்டா வெறுத்துப் போயிடும். உப்புமா செய்யலாம் , உப்புமா எனக்கு சாப்பிட பிடிக்கும்னு சொல்ற மக்கள தேடி பிடிக்க வேண்டியதா இருக்கு. இந்த பிரச்சினைய தீர்க்க தேடிப் புடிச்சதுதான் இந்த கொஸ்கொஸ். நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க.


என்னெல்லாம் வேணும்? எதெல்லாம் இருக்கோ அதெல்லாம் பயன்படுத்தலாம்.ஒரு சின்ன லிஸ்ட்.காய்கறி:-கேரட்-2பீன்ஸ்-200 கிராம்குட மிளகாய்-1பச்சை பட்டாணி-100 கிராம்.தக்காளி-2வெங்காயம்-2.உருளைக்கிழங்கு-1காளான் - 4பச்சை மிளகாய்-2கொஸ்கொஸ்-300 கிராம்மசாலாஸ்:-மிளகாய்ப்பொடிமஞ்சள் தூள்சாம்பார் பொடிமல்லித்தூள்கொத்த மல்லி தளை,கடுகு,உழுத்தம் பருப்பு,கறிவேப்பிலை.உப்பு
எப்படி செய்யனும்?
ரொம்ப சிம்பிள், முதல்ல கெஸ்கொஸ் எடுத்து 4 ஸ்பூன் எண்ணேய், அல்லது நெய் விட்டு நல்லா பொன்நிறமாக 5-10 நிமிசம் வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். எல்லா காய்களயும் உங்களுக்கு விருப்பமான வடிவில் கட் பண்ணி வெச்சிக்கனும்.அப்புறமா ஒரு பிரையிங் பேன் வைத்து காய்ந்த்தது சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உழுந்து பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுள் கேரட்டை போட்டு நன்கு வதக்கவும், சிறிது நேரம் கழித்து பீண்ஸ்,குடமிளகாய், உருளைக்கிழங்கு, அப்புறம் பச்சை பட்டானி , வெங்காயம், தக்காளி பொட்டு எண்ணெயில் நன்றாக வதக்கவும். எவ்வளவு நேரம் வதக்கனும்னா உங்களுக்கு அரை வேக்காட்டு காய் பிடிக்கும்னா கொஞ்சநேரமே போதும், இல்லனா எல்லாக் காய்க்களும் நன்றாக வேகும் வரை வதக்கலாம். எப்படி தெரிஞுக்கிறது கேக்கறீங்களா, அப்படியே ஒரு துண்டு கேரட் எடுத்து சாப்பிட்டு பாருங்க. ஒரு தம்ப் ரூல் என்னனா மேலே இருக்கும் ஆர்டரில் போட்டிருந்தால் தக்காளி நல்லா வதங்கி, பேஸ்ட் மாதிரி மாறும் அதோட மோல் தோல் மட்டும் இருக்குமாறு ஆகும், அப்ப எல்லாக் காயுமே ஓரளவுக்கு வெந்து இருக்கும். இத செய்யும் போது அடில பிடிக்கற மாதிரி தோனுச்சினா ரெண்டு ஸ்பூன் எண்ணேய் உடனே ஊத்தனும். இப்ப தண்ணி ஊத்தனும் இதுல. எவ்வளவு? ஒரு கப் கொஸ்கொஸ் செய்ய இரண்டு கப் தண்ணி ஊத்தனும். நல்லா வதக்கிய காய்கறில தண்ணிய ஊத்தி மிளகாய் பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள் , சாம்பார் பொடி, வாசனையா வேணும்னா அதுக்கு தேவையானதுனு எல்லாம் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடனும். நல்லா கொதிச்சி வரும்போது வறுத்து வச்சிருக்கற கொஸ்கொஸ் கொஞ்சம் கொஞ்சமா கொட்டி தண்ணீர் சுண்டும் வரை கிளரி, இறக்கினால் சுவையான கொஸ்கொஸ் ரெடி. என்ன ரெசிப்பி ஓகேயா?.





பெருசா இது ஒன்னும் இல்லங்க. ரவா உப்புமா செய்யற மாதிரிதான் இதும். ரவைக்கு பதிலா கொஸ்கொஸ், கூட கொஞ்சம் வெஜிடபில்ஸ் அவ்வளவுதான். வேகமா செஞ்சா 30 நிமிசம். மெதுவா செஞ்சா ஒரு மணி நேரத்துல முடிச்சிடலாம். எப்படி சாபிடனும்? எதுக்கும் உங்க நலம் விரும்பிகள் கிட்ட சோதனை செஞ்சு பாத்தப்புறமா நீங்க சாப்பிடுங்க. :)




The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche