some more kolam








சில கோலங்கள்-Kolam - artwork of South India
நன்றி-
Webpages of Tamil Electronic Library ©K. Kalyanasundaram

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை



நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்

துங்கக் கரிமுகத்து து¡மணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா.

பழமொழி

1. அகத்தின் அழகு முகத்திலே.
2 ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
3. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
4. இக்கரைக்கு அக்கரை பச்சை.
5. இனம் இனத்தையே சாரும்.
6. இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
7. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
8. ஈர நாவிற்கு எலும்பில்லை.
9. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது.
10. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
11. உளவு இல்லாமல் களவு இல்லை.
12. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்பாது.
13. உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
14. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
15. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
16. எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
17. எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்.
18. எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
19. எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
20. எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
21. எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
22. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
23. எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
24. எங்கே பர வாசனை?
25. கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
26. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
27. கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
28. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
29. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்,
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
30. கடுகு சிறுத்தாலும் காரம் குறைய
31. கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
32. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைய
33. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
34. கரும்பு தின்னக் கூலியா?
35. காலம் போகும் வார்த்தை நிற்கும்.
36. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
37. காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
38. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
39. காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
40. கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
41. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
42. குடல் காய்ந்தால் குதிரைய
43. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
44. குளiக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
45. கெண்டையைப் போட்டு வராலை இழு.
46. கெடுவான் கேடு நினைப்பான்.
47. கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
48. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
49. கைவில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
50. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
51. கையாளாத ஆய 85. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
52. கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
53. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
54. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
55. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
56. சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
57. சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
58. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
59. சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
60. சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
61. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
62. தன் கையே தனக்கு உதவி.
63. தன் முதுகு தனக்கு உதவி.
64. தன் வினை தன்னைச் சுடும்.
65. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
66. தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
67. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
68. தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
69. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
70. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
71. தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
72. துணை போனாலும் பிணை போகாதே.
73. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
74. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
75. தூங்குகிற ப 113. நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
76. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
77. நிறைகுடம் நீர் தளும்பாது.
78. நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
79. நிறை குடம் நீர் தளும்பாது.
80. நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
81. நெருப்பு இல்லாமல் ப
82. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
83. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
84. பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவ
85. பனங்காட்டு நரி சலசலப்ப
86. பாம்பின் கால் பாம்பு அறிய
87. பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.
88. பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி
89. மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
90. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
91. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
92. வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
93. விளையாட்டு வினையாயிற்று.
94. வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.
95. வெறுங்கை முழம் போடுமா?
96. வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
97. வெறுங்கை முழம் போடுமா?
98. வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
99. வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?


என் இனிய நண்பர்களே!

வனக்கம். என்னடா இவன் திடீர்னு குங்குமம் அட்ட படத்தை போஸ்ட் பண்ணி இருக்கான்,அதுவும் சிம்ரன் இருக்காங்க, என்ன விசயம்னு யோசிக்கரிங்களா?
மேட்டர் இருக்கு. அட்டைல இல்ல புத்தகத்துக்கு உள்ள....





மேலே உள்ள பெட்டி செய்திதான் மேட்டர், நானும் எனது நண்பர் சங்கரும் பெருமுயற்சி செய்து சாரங்-2006 ஐ.ஐ.டி கலைவிழாவில் முதன் முதலாக நமது நாட்டுப்புற கலைகளுக்காக ஒரு போட்டியை நடத்தினொம். இது நமது கலாச்சாரத்தை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்ச்சி. இது அடுத்த ஆண்டும் தொடர இதை பட்றிய விபரங்களை கல்லூரிகலில் பயிலும் உங்கள் நண்பர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.


நாட்டுப்புறப் பாடல்கள்
தொழிலாளர் பாடல்கள்
எங்கும் நெல்
களத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ
கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 1

கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
கீழேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 2

மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
மேலேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 3

வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோ
வாரிவாரி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 4

தெற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ
திரட்டித் திரட்டி மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 5

நாட்டியக் குதிரைபோல - ஏலங்கிடி லேலோ
நாலுகாதில் ம’த’க்குதையா - ஏலங்கிடி லேலோ 6

குள்ளiமாடும் புள்ளiமாடும் - ஏலங்கிடி லேலோ
குதிச்சுக்குதிச்சு மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 7

பால்கொடுக்கிற பசுவுங்கூட - ஏலங்க’டி லேலோ
பையப்பைய மித’iக்குதையா - ஏலங்கிடி லேலோ 8

பல்லுப்போடாத காளைக்கன்றும் - ஏலங்கிடி லேலோ
பால் மறந்த கிடாக்கன்றும் -ஏலங்கிடி லேலோ 9

பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ
பரந்துபரந்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 10

எல்லாமாடும் சேர்ந்துதானும்- ஏலங்கிடி லேலோ
ஏகமாத்தான் மிதிக்குதையா -ஏலங்கிடி லேலோ 11

கால்படவும் கதிருபூரா - ஏலங்கிடி லேலோ
கழலுதையா மணிமணியா - ஏலங்கிடி லேலோ 12

நெல்லுவேறே வைக்கோல் வேறே- ஏலங்கிடி லேலோ
நல்லாஇருக்கு பார்க்கப்பார்க்க - ஏலங்கிடி லேலோ 13

வயிற்றுப்பசி மாட்டுக்கெல்லாம் - ஏலங்கிடி லேலோ
வைக்கோலோடே போகுதையா - ஏலங்கிடி லேலோ 14

ஆண்பிள்ளைக்கும் பெண்பிள்ளைக்கும்- ஏலங்கிடி லேலோ
ஆளுக்கொரு மரக்கால் நெல்லு - ஏலங்கிடி லேலோ 15

அலங்கன் அலங்கிரெண்டுபேருக்கும் - ஏலங்கிடி லேலோ
ஆறுமரக்கால் நெல்லுக் கூலி -ஏலங்கிடி லேலோ 16

வண்டிவண்டியா நெல்லுத்தானும் -ஏலங்கிடி லேலோ
வருகுதையா அரண்மனைக்கு- ஏலங்கிடி லேலோ 17

அரண்மனைக் களஞ்சியம்பார்க்க- ஏலங்க’டி லேலோ
ஆயிரங்கண் வேணுமையா- ஏலங்க’டி லேலோ 18

புழுங்கல்நெல்லுக் குத்தித்தானும் - ஏலங்கிடி லேலோ
புள்ளைகளுக்கு வேகுதையா -ஏலங்கிடி லேலோ 19

வெள்ளiசெவ்வா வேளையிலே -ஏலங்கிடி லேலோ
வேகுதையா காய்கறியும்-ஏலங்கிடி லேலோ 20

கும்பல்கும்பலா நெல்லுத்தானும் - ஏலங்கிடி லேலோ
குலுமையெல்லாம் நிறைக்குதையா - ஏலங்கிடி லேலோ 21

தப்புநெல்லும் தவறுநெல்லும- ஏலங்கிடி லேலோ
தாராளமாக் கெடக்குதையா - ஏலங்கிடி லேலோ 22

கூனற்கிழவி கூடைமுறத்தை -ஏலங்கிடி லேலோ
கூனிக்கூனிக் கொண்டு போறாள் -ஏலங்கிடி லேலோ 23

கூட்டிப் பொறுக்கிக் கூடையை ரொப்பி- ஏலங்கிடி லேலோ
வீட்டுக்குப் போறா வேடிக்கையாதான் - ஏலங்கிடி லேலோ 24

சந்துபொந்தெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
சாக்கடையெல்லாம் நெல்லுக்கிடக்கு- ஏலங்கி’டி லேலோ 25

வயலெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ
வழியெல்லாம் நெல்லுக்கிடக்கு - ஏலங்கிடி லேலோ 26

------------
சந்தனத் தேவன் பெருமை
எல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1

சந்தனம் காடுதானும்-ஏலங்கிடி லேலோ
சரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ 2

எல்லாரு வீடுதானும்-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற குச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 3

சந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ
சரியான மச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 4

எல்லாரும் கட்டும்வேட்டி-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடி லேலோ 5

சந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ
சரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ 6

எல்லாரும் போடும்சட்டை-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 7

சந்தனம் போடும்சட்டை -ஏலங்கிடி லேலோ
சரியான பட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 8

எல்லாரு திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ராத்திருட்டு -ஏலங்கிடி லேலோ

சந்தனம் திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ
சரியான மாயத்திருட்டு -ஏலங்கிடி லேலோ 10

எல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற பெருநெல்சோறு -ஏலங்கிடி லேலோ 11

சந்தனம் தின்னும்சோறு -ஏலங்கிடி லேலோ
சரியான சம்பாச்சோறு -ஏலங்கிடி லேலோ 12

எல்லாரும்ஏறும் வண்டி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கட்டைவண்டி- ஏலங்கிடி லேலோ 13

சந்தனம் ஏறும் வண்டி-ஏலங்கிடி லேலோ
சரியான ஜட்காவண்டி -ஏலங்கிடி லேலோ 14

எல்லாரும் வெட்டும்கத்தி- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி - ஏலங்கிடி லேலோ 15

சந்தனம் வெட்டும் கத்தி - ஏலங்கிடி லேலோ
சரியான பட்டாக்கத்தி- ஏலங்கிடி லேலோ 16

எல்லாருங் கட்டும்பொண்ணு-ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கறுத்தபொண்ணு - ஏலங்கிடி லேலோ 17

சந்தனம் கட்டும்பொண்ணு -ஏலங்கிடி லேலோ
சரியான சிவத்தபொண்ணு-ஏலங்கிடி லேலோ 18

எல்லாரும் போடும்மிஞ்சி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கல்வெள்ளiமிஞ்சி -ஏலங்கிடி லேலோ 19

சந்தனம் போடும்மிஞ்சி- ஏலங்கிடி லேலோ
சரியான வெள்ளiமிஞ்சி-ஏலங்கிடி லேலோ 20

எல்லாரும் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முரட்டுவெற்ற’iலை -ஏலங்கிடி லேலோ 21

சந்தனம் போடும் வெற்றிலை -ஏலங்கிடி லேலோ
சரியான கொழுந்துவெற்றிலை -ஏலங்கிடி லேலோ 22

எல்லாரு துணிப்பெட்டியும் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம்-ஏலங்கிடி லேலோ 23

சந்தனம் துணிப்பெட்டிதான் -ஏலங்கிடி லேலோ
சரியான தேக்குப்பெட்டியாம் -ஏலங்கிடி லேலோ 24

எல்லாரும் படுக்குங்கட்டில்- ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில-ஏலங்கி லேலோ 25

சந்தனம் படுக்குங்கட்டில-ஏலங்கிடி லேலோ
சரியான சந்தனக்கட்டில- ஏலங்கிடி லேலோ 26

எல்லாரு கழுத்திலேதான்-ஏலங்கிடி லேலோ

ஏழைக்கேற்ற செவந்திப்பூவாம் - ஏலங்கிடி லேலோ

சந்தனம் கழுத்திலேதான் -ஏலங்கிடி லேலோ
சரியான செம்பகப்பூவாம் - ஏலங்கிடி லேலோ 28

எல்லாரும் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 29

சந்தனம் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ
சரியான சாப்புத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 30

எல்லாரும் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆலம்இலை -ஏலங்கிடி லேலோ 31

சந்தனம் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ
சரியான வாழைஇலை -ஏலங்கிடி லேலோ 32
எல்லாரும் படுக்கும் பாயி -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற கோரைப்பாயி -ஏலங்கிடி லேலோ 33

தனம் படுக்கும்பாயி -ஏலங்கிடி லேலோ
சரியான ஜப்பான் பாயி -ஏலங்கிடி லேலோ 34

எல்லாரும் போடும்மோதிரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஈயமோதிரம் -ஏலங்கிடி லேலோ 35

சந்தனம் போடும் மோதிரம் -ஏலங்கிடி லேலோ
சரியான வைரமோதிரம் -ஏலங்கிடி லேலோ 36

எல்லாரும் பண்ணும்சவரம் -ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற முகச்சவரம் - ஏலங்கிடி லேலோ 37

சந்தனம் பண்ணுஞ்சவரம் - ஏலங்கிடி லேலோ
சரியான தலைச்சவரம் - ஏலங்கிடி லேலோ 38

எல்லாரும் குளiக்கிறது - ஏலங்கிடி லேலோ
ஏழைக்கேற்ற ஆற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 39

சந்தனம் குளiக்கிறது - ஏலங்கிடி லேலோ
சரியான ஊற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 40

------------
ஆள் தேடுதல்
தெருத்தெருவாய் தேடி வாறான் - ஏலங்கிடி லேலோ
திண்ணை திண்ணையாத் தாண்டிவாரான் -ஏலங்கிடி லேலோ 1

சந்திலே பொந்திலே சாஞ்சுபார்த்து - ஏலங்கிடி லேலோ
சயிக்கினையும் செஞ்சுவாறான் -ஏலங்கிடி லேலோ 2

முன்னுக்கும் பின்னுக்கும் பார்த்துப் பார்த்து -ஏலங்கிடி லேலோ முணுமுணுன்னு பேசிவாறான் -ஏலங்கிடி லேலோ 3

ஆளுப் பிடிக்க ஏழுமணிக்கு -ஏலங்கிடி லேலோ
ஆலாப் பறந்து வாறான் -ஏலங்கிடி லேலோ 4

அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் -ஏலங்கிடி லேலோ
அட்டுவான்சும் கொடுத்துவாறான் -ஏலங்கிடி லேலோ 5

ஆளுக்கொரு அரிவாள்தானும் -ஏலங்கிடி லேலோ
ஆறுமுகக் கயிறுரெண்டும் -ஏலங்கிடி லேலோ 6

சும்மாடும் சேர்த்தெடுத்து -ஏலங்கிடி லேலோ
சுறுசுறுப்பாய்ப் போறாங்களாம் -ஏலங்கிடி லேலோ 7

------------
விறகொடிக்கும் பெண்

வேகாத வெயிலுக்குள்ளே -ஏதில்லலோ லேலோ
விறகொடிக்கப் போறபெண்ணே -ஏதில்லலோ லேலோ 1

காலுனக்குப் பொசுக்கலையோ -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ 2

காலுப் பொசுக்கினாலும் -ஏதில்லலோ லேலோ
கற்றாழைமுள்ளுக் குத்தினாலும் -ஏதில்லலோ லேலோ 3

காலாக் கொடுமையாலே -ஏதில்லலோ லேலோ
கஷ்டப் படக் காலமாச்சு -ஏதில்லலோ லேலோ 4

கஞ்சிக் கலயங்கொண்டு -ஏதில்லலோ லேலோ
காட்டுவழி போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 5

கல்உனக்குக் குத்தலையோ -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திடாதோ -ஏதில்லலோ லேலோ 6

கல்எனக்குக் குத்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ
கல்லளுத்தி வந்திட்டாலும் -ஏதில்லலோ லேலோ 7

விதிவசம்போ லாகணுமே -ஏதில்லலோ லேலோ
வெயிலிலேயும் நடக்கணுமே -ஏதில்லலோ லேலோ 8

மத்தியான வேளையிலே -ஏதில்லலோ லேலோ
வளைகுலுங்கப் போறபொண்ணே -ஏதில்லலோ லேலோ 9

கஞ்சி குடிக்கையிலே -ஏதில்லலோ லேலோ
கடித்துக்கொள்ள என்னசெய்வாய் -ஏதில்லலோ லேலோ 10

கஞ்சிகண்டு குடிக்கிறதே -ஏதில்லலோ லேலோ
கடவுள்செய்த புண்ணியமே -ஏதில்லலோ சாமி 11

கம்பஞ்கஞ்சிக் கேற்றாப்போல -ஏதில்லலோ லேலோ
காணத்துவையல் அரைச்சிருக்கேன் -ஏதில்லலோ சாமி 12

கஷ்டப்பட்டு பட்டுப்பட்டு -ஏதில்லலோ லேலோ
கழுத்தொடியச் சுமக்கும்பொண்ணே -ஏதில்லலோ லேலோ 13

எங்கேபோய் விறகொடித்து -ஏதில்லலோ லேலோ
என்னசெய்யப் போறாய்பெண்ணே -ஏதில்லலோ லேலோ 14

காட்டுக்குள்ளே விறகொடித்து -ஏதில்லலோ
சாமி வீட்டுக்கதைச் சுமந்துவந்து -ஏதில்லலோ சாமி 15

கால்ரூபாய்க்கு விறகுவிற்று -ஏதில்லலோ லேலோ
கஞ்சிகண்டு குடிக்கணுமே -ஏதில்லலோ சாமி 16

--------------------

குடும்பப் பாட்டுகள்
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம்இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளைஇருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசா
இலையைநம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவைநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சைநம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயைநம்பி ஏலேலோ பழம்இருக்க ஐலசா
பழத்தைநம்பி ஏலேலோ மகன்இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீஇருக்க ஐலசா
உன்னைநம்பி ஏலேலோ நான்இருக்க ஐலசா
என்னைநம்பி ஏலேலோ எமன்இருக்க ஐலசா
எமனைநம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டைநம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா.

-----------------
பெண்ணுக்கு அறிவுரை
ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணே
அறிவிருந்தால் போதுமடி -சுண்டெலிப்பெண்ணே 1
காத்திருந்தவன் பொண்டாட்டியைச் -சுண்டெலிப்பெண்ணே
நேத்துவந்தவன் கொண்டுபோனான் -சுண்டெலிப்பெண்ணே 2

அதனாலேதான் பயமாஇருக்கு -சுண்டெலிப்பெண்ணே
அக்கம்பக்கம் போகாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 3

கண்ணடிக்கிற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கண்ணெடுத்துப் பார்க்கேதேடி ©சுண்டெலிப்பெண்ணே 4

கடைக்குப்போற பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
கையலைப் பழைக்காதடி -சுண்டெலிப்பெண்ணே 5

காவாலிப் பயலைக்கண்டால் -சுண்டெலிப்பெண்ணே
காலாட்டிக்கிட்டு நிற்காதடி -சுண்டெலிப்பெண்ணே 6

நெற்றியிலே பொட்டுவைச்சு -சுண்டெலிப்பெண்ணே
நெருங்கிநிண்ணு பேசாதேடி ©சுண்டெலிப்பெண்ணே 7

புருவத்திலே மையைவச்சு -சுண்டெலிப்பெண்ணே
பொய்ஒண்ணுமே சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 8

ஜோட்டிலே மாட்டல்வச்சு -சுண்டெலிப்பெண்ணே
ஜோக்குநடை நடக்காதேடி -சுண்டெலிப்பெண்ணே 9

வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச்-சுண்டெலிப்பெண்ணே
வெறும்பயலைப் பார்க்கேதேடி -சுண்டெலிப்பெண்ணே 10

புகையிலையைப் போட்டுக்கிட்டுச் -சுண்டெலிப்பெண்ணே
பொடிப்பயலைப் பார்க்கதடி சுண்டெலிப்பெண்ணே 11

வாறவனையும் போறவனையும் -சுண்டெலிப்பெண்ணே
வழிமறிச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 12

சந்தைக்குப்போற சனங்களைநீ -சுண்டெலிப்பெண்ணே
ஜாடைப் பேச்சுப் பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 13

சலுக்காரு ரோட்டிலேநீ -சுண்டெலிப்பெண்ணே
சண்டைகிண்டை போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 14

பக்கத்துவீட்டுப் பெண்களைச் -சுண்டெலிப்பெண்ணே
பரிகாசம்நீ பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 15

இடுப்புச் சிறுத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
இறுமாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 16

மண்டை பெருத்தவளே -சுண்டெலிப்பெண்ணே
தண்டுமுண்டு பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 17
விரிச்சநெற்றிக் காரியே -சுண்டெலிப்பெண்ணே
வீறாப்புநீ பேசாதேடி -சுண்டெலிப்பெண்ணே 18

இரும்புநெஞ்சு படைத்த -சுண்டெலிப்பெண்ணே
குறும்புபொண்ணும்நீ செய்யாதேடி -சுண்டெலிப்பெண்ணே 19

மயிர்சுருண்டு நீண்டுவளர்ந்த -சுண்டெலிப்பெண்ணே
மரியாதைகெட்டுத் திரியாதேடி -சுண்டெலிப்பெண்ணே 20

உருட்டிஉருட்டி முழிக்கும் -சுண்டெலிப்பெண்ணே
திருட்டுத்தனம் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 21

உதட்டழக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
ஒருத்தரையும் வையாதேடி -சுண்டெலிப்பெண்ணே 22

கிளiமூக்குக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கிரித்துவரும் பண்ணாதேடி -சுண்டெலிப்பெண்ணே 23

பல்வரிசைக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
பழிஇழுத்துப் போடாதேடி -சுண்டெலிப்பெண்ணே 24

குறுங்கழுத்துக் காரியேடி -சுண்டெலிப்பெண்ணே
கோள்குண்டுணி சொல்லாதேடி -சுண்டெலிப்பெண்ணே 25

-------

சிறுவர்களுக்கான பாடல்கள்
1. சாய்ந்தாடுதல்

சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாயக் கிளiயே சாய்ந்தாடு
அன்னக் கிளiயே சாய்ந்தாடு
ஆவாரம் பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப் புறாவே சாய்ந்தாடு

சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயிற் புறாவே சாய்ந்தாடு
பச்சைக்கிளiயே சாய்ந்தாடு
பவழக்கொடியே சாயந்தாடு
சோலைக் குயிலே சாய்ந்தாடு
சுந்தர மயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு.

2. கை வீசுதல்
கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய்ப் போடலாம் கைவீசு

கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
அப்பம் வாங்கலாம் கைவீசு
அமர்ந்து தின்னலாம் கைவீசு
பூந்தி வாங்கலாம் கைவீசு
பொருந்தி யுண்ணலாம் கைவீசு
பழங்கள் வாங்கலாம் கைவீசு
பரிந்து புசிக்கலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய்ப் போடலாம் கைவீசு
கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு
தேரைப் பார்க்கலாம் கைவீசு
திரும்பி வரலாம் கைவீசு
கம்மல் வாங்கலாம் கைவீசு
காதில் மாட்டலாம் கைவீசு.

3. தோள் வீசுதல்

தோள்வீ சம்மா தோள்வீசு
சுந்தரக் கிளiயே தோள்வீசு
பச்சைக் கிளiயே தோள்வீசு
பவளக் கொடியே தோள்வீசு
திண்ணையின் கீழே தவழ்ந்து விளையாடும்
தேனே மணியே தோள்வீசு

4. காக்கா

காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டுவா
குருவி குருவி
கொண்டைக்குப் பூக்கொண்டுவா
கிளiயே கிளiயே
கிண்ணத்தில் பால் கொண்டுவா
கொக்கே கொக்கே
குழந்தைத் தேன் கொண்டுவா
அப்பா முன்னே வாருங்கள்
அழாதே யென்று சொல்லுங்கள்

நிலாப் பாட்டு<
1.
நிலாநிலா வாவா
நில்லாமே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூக் கொண்டுவா.
நடுவீட்டில் வையே
நல்ல துதி செய்யே
வெள்ளiக் கிண்ணத்தில் பால்சோறு
அள்ளiயெடுத்து அப்பன் வாயில்
கொஞ்சிக் கொஞ்சி யூட்டு
குழந்தைக்குச் சிரிப்புக் காட்டு

2.
எட்டிஎட்டிப் பார்க்கும்
வட்ட வட்ட நிலாவே
துள்ளiத்துள்ளiச் சிரிக்கும்
தும்பைப்பூவு நிலாவே.

3.
நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.

4.
நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களiமண்ணுக்குப் போனேன்.
களiமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்பிள்ளை துள்ளiத் துள்ளi விளையாட.
---------
வித்திலா மலேவிளைந்த வெண்ணிலாவே - நீதான்
விளைந்தவண்ண மேதுசொல்வாய் வெண்ணிலாவே
அந்தரத்தி லாடுகின்றார் வெண்ணிலாவே-அவர்
ஆடும்வகை யெப்படியோ வெண்ணிலாவே ?
ஞானமய மாய்விளக்கும் வெண்ணிலாவே -என்னை
நானறியச் சொல்லுகண்டாய வெண்ணிலாவே -
அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலாவே -எங்கள்
ஐயர்வரு வாரோசொல்வாய் வெண்ணிலாவே -
ஆருமறி யாமலிங்கே வெண்ணிலாவே -அருளாளர்
வரு வாரோசொல்லாய்,வெண்ணிலாவே.

வினா விடைகள்
1.
ஓடு ஓடு
என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளiப்பால்.
என்ன கள்ளi ? சதுரக்கள்ளi.
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.


2.வேர் வேர்

என்ன வேர் ? வெட்டிவேர்.
என்ன வெட்டி ? பனைவெட்டி.
என்ன பனை? தாளiப்பனை.
என்ன தாளi? விருந்தாளi.
என்ன விருந்து? மணவிருந்து.
என்ன மணம்? பூமணம்
என்ன பூ? மாம்பூ
என்ன மா? அம்மா.

3. ஆண்டி ஆண்டி

ஆண்டி ஆண்டி
என்ன ஆண்டி? பொன்னாண்டி.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? பூஅண்டம்
என்ன பூ? பனம்பூ
என்ன பனை? தாளiப்பானை
என்ன தாளi? நாகதாளi
என்ன நாகம்? சுத்தநாகம்
என்ன சுத்தம்? வீட்டுச் சுத்தம்
என்ன வீடு? ஓட்டுவீடு
என்ன ஓடு? பாலோடு
என்ன பால்? நாய்ப்பால்
என்ன நாய்? வேட்டைநாய்
என்ன வேட்டை? பன்றிவேட்டை
என்ன பன்றி? ஊர்ப்பன்றி
என்ன ஊர்? கீரையூர்
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பள்ளiயறை
என்ன பள்ளi? மடப்பள்ளi
என்ன மடம்? ஆண்டிமடம்
என்ன ஆண்டி? பொன்னாண்டி

4.
நீ எங்கே போனாய்?
ஊருக்குப் போனேன்.
என்ன ஊர்? மயிலாப்பூர்
என்ன மயில்? காட்டுமயில்
என்ன காடு? ஆறுகாடு
என்ன ஆறு? பாலாறு
என்ன பால்? கள்ளiப்பால்
என்ன கள்ளi? இலைக்கள்ளi
என்ன இலை? வாழைஇலை
என்ன வாழை? கற்பூர வாழை
என்ன கற்பூரம்? ரசக்கற்பூரம்
என்ன ரசம்? மிளகு ரசம்
என்ன மிளகு? வால்மிளகு
என்ன வால்? நாய்வால்
என்ன நாய்? மரநாய்
என்ன மரம்? பலாமரம்
என்ன பலா? வேர்ப்பலா
என்ன வேர்? வெட்டிவேர்
என்ன வெட்டி? பனைவெட்டி
என்ன பனை? தாளiபனை
என்ன தாளi? விருந்தாளi
என்ன விருந்து? நிலாவிருந்து
என்ன நிலா? பிறைநிலா
என்ன பிறை? நெற்றிப்பிறை
என்ன நெற்றி? பெண்நெற்றி
என்ன பெண்? மணப்பெண்
என்ன மணம்? பூமணம்
என்ன பூ? மாம்பூ
என்ன மா? அம்மா.

-------- கண்ணாமூச்சி -1

கண்ணாம் கண்ணாம் பூச்சாரே
காது காது பூச்சாரே
எத்தனை முட்டை இட்டாய்?
மூணு முட்டை.
முணு முட்டையுந் தின்னுப்புட்டு
ஒருசம்பா முட்டை கொண்டுவா

கண்ணாமூச்சி-2

தத்தக்கா புத்தக்கா -தவலைச் சோறு
நெற்றிமா நெருங்கமா -பச்சைமரத்திலே பதவலை கட்டப்
பன்றிவந்து சீராடப் -பறையன் வந்து நெல்லுக்குத்த
குண்டுமணி சோறாக்கக்-குருவிவந்து கூப்பிடுது.

--------- பலிஞ் சடுகுடு
1.
சக்கு சக்குடி -சரு வொலாக்கைடி
குத் தொலக்கைடி -குமரன் பெண்டாண்டி
பாளயத்திலே வாழ்க்கைப்பட்ட
பழனி பெண்டாட்டி.

2.
மாப்பிள்ளை மாப்பிள்ளை
மண்ணாங்கட்டி தோப்புளே
அரைக்காசு வெற்றிலைக்குக்
கதிகெட்ட மாப்பிளை.

3.
குத்துலக்கை -கோலிக்குண்டு
வச்செடுத்தான் -வாரிக்கொள்வான்
தப்பைதாளம் -ஏந்திஇறக்கி
ஏந்தின கையிலே சொக்கி

4.
கவானைக் சுவட்டி சுவட்டி சுவட்டி
பலிஞ் சடுகுடு .....................

5.
பலிஞ் சடுகுடு அடிப்பானேன் ?
பல்லு ரெண்டும் போவானேன் ?
உங்கப்பனுக்கும் உங்காயிக்கும்
ரெண்டுபணம் தண்டம் தண்டம் தண்டம்.

6.
தூதூ நாயக்குட்டி -தொட்டியத்து நாய்க்குட்டி
வளைச்சுப் போட்டா -நாய்க்குட்டி
இழுத்துப் போட்டா -நாய்க்குட்டி
நாய்க்குட்டி நாய்க்குட்டி நாய்க்குட்டி

7.
கிக்கீக்குங் கம்பந் தட்டை
காசுக்கு ரெண்டு சட்டை
கருணைக் கிழங்கடா
வாங்கிப் போட்டா வாங்கிப் போட்டா.

8.
அந்தக் குடுக்கை இந்தக் குடுக்கை
கல்லிலே போட்டால் கரைக் குடுக்கை
சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை....

9.
அந்த அரிசி இந்த அரிசி
நேத்துக் குத்தின கம்பரசிகம்பரிசி
கம்பரிசி கம்பரசி

10.
கருணைக் கிழங்கடா வாழைப் பழமடா
தோலை உரியடா தொண்டைக்குள் அடையடா
அடையடா அடையடா அடையடா

11.
கீச்சுக் கீச்சடா கீரைத் தண்டடா
நட்டு வச்சேண்டா பட்டுப் போச்சுடா
பட்டுப் போச்சுடா பட்டுப் போச்சுடா

12
கொத்துக் கொத்து ஈச்சங்காய்
கோடாலி ஈச்சங்காய்
மதுரைக்குப் போனாலும்
வாடாத ஈச்சங்காய்
ஈச்சங்காய் ஈச்சங்காய்.

------ கல்லாங்காய் விளையாட்டுப் பாடல்கள்

1.
கொக்குக்சிக் கொக்கு
ரெட்டை சிலாக்கு
முக்குச் சிலந்தி
நாக்குலா வரணம்
ஐயப்பன் சோலை
ஆறுமுக தாளம்
ஏழுக்குக் கூழு
எட்டுக்கு முட்டி
ஒன்பது கம்பளம்
பத்துப் பழம் சொட்டு.

2.
1.
கட்டை வச்சேன்
மரம் பிளந்தேன்

2. ஈரிரண்டைப் போடடா
இருக்க மாட்டைக் கட்டடா
பருத்திக் கொட்டையை வையடா
பஞ்சணேசா.

3. முக்கட்டி வாணியன் செக்காட
செக்குஞ் செக்கும் சேர்ந்தாட
வாணியன் வந்து வழக்காட
வாணிச்சி வந்து கூத்தாட.

4.
நாலை வைச்சு நாலெடு
நாரயணன் பேரேடு
பேரெடுத்துப் பிச்சையெடு

5.
ஐவரளi பசுமஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது
பத்தாத மஞ்சள் பசுமஞ்சள

6.
ஆக்குருத்தலம் குருத்தலம்
அடுப்புத் தண்டலம் தண்டலம்
வேம்பு கட்டால் வெண்கலம

7.
ஏழு புத்திர சகாயம்
எங்கள் புத்திர சகாயம்
மாட்டுப் புத்திர சகாயம் மகராஜி.

8.
எட்டும் பொட்டும்
இடக்கண் பொட்டை
வலக்கண் சப்பட்டை

9.
ஒன்பதுநரி சித்திரத்தை
பேரன் பிறந்தது
பேரிடவாடி பெரியாத்Aது

10.
பத்திரா சித்திரா கோலாட்டம்
பங்குனி மாசம்ஆடி
வெள்ளiக்கிழமைஅம்மன் கொண்டாட்டம்.

11.
நானும் வந்தேன் நடுக்கட்டைக்கு
என் தோழி வந்தாய் எடுத்தகட்டைக்கு
தட்டில் அப்பம்கொட்ட
தவலை சம்பாக்கொட்ட
ஒத்தைக் கையால் கொட்ட
ஒசந்த மரக்கட்டை
குத்திக் குத்திக் தாரும்
பொட்டலங் கட்டித் தாரும்.
-----------

தெம்மாங்கு
செம்பிலே சிலைஎழுதி -மாமா
செல்வத்திலே நான் பிறந்தேன்
வம்பிலேதான் கைகொடுத்து -மாமா
வார்த்தைக் கிடம்ஆனேனே 1

கண்டி கொளும்பும்கண்டேன் -சாமி
கருங்குளத்து மீனுங்கண்டேன்
ஒண்டி குளமும்கண்டேன் -சாமி
ஒயிலாளைக் காணலையே 2

ஏழுமலைக் கந்தப்பக்கம் -சாமி
இஞ்சிவெட்டப் போனபக்கம்
கண்சிவந்து வந்ததென்ன -சாமி
கடுங்கோபம் ஆனதென்ன? 3

மூக்குத்தித் தொங்கலிலே -குட்டி
முந்நூறு பச்சைக்கல்லு
ஆளைத்தான் பகட்டுதடி -குட்டி
அதிலேஒரு பச்சைக்கல்லு. 4

சந்தனம் உரசுங்கல்லு -குட்டி
தலைவாசலைக் காக்குங்கல்லு
மீன்உரசுங் கல்லுக்கடி -குட்டி
வீணாசைப் பட்டாயோடி. 5

ஆசைக்கு மயிர்வளர்த்து -மாமா
அழகுக்கொரு கொண்டைபோட்டுச்
சோம்பேறிப் பயலுக்குநான் -மாமா
சோறாக்க ஆளானேனே 6

வெள்ளைவெள்ளை நிலாவே -சாமி
வெளiச்சமான பால்நிலாவே
கள்ள நிலாவேநீ -சாமி
கருக்கவிட்டால் ஆகாதோ? 7

கும்பகோணம் ரெயிலுவண்டி -குட்டி
குடிகெடுத்த தஞ்சாவூரு
தஞ்சாவூரு தாசிப்பொண்ணு -குட்டி
தாயைமறக் கடிச்சாளடி. 8

வெட்டிப்போட்ட காட்டுக்குள்ளே -குட்டி
வெறகொடிக்கப் போறபொண்ணே
கட்டைஉன்னைத் தடுத்திடாதா -குட்டி
கரடிபுலி தாவிடதா? 9

ஆத்திலே தலைமுழுகி -குட்டி
ஆயிரங்கால் பட்டுடுத்தி
ஊத்துப்பக்கம் உட்காந்துநீ -குட்டி
போட்டுக்கோடி வெற்றிலையை. 10

கொக்குப் பறக்குதடி -குட்டி
கோணல்வாய்க்கால் மூலையிலே
பக்கத்திலே உட்கார்ந்துநீ -என்னைப்
பதறவிட்டுப் போனோயேடி. 11

காப்புக் கலகலென்னைக் -குட்டி
கைவளையல் ரெண்டும்மின்ன
மூக்குத்தி வேறேமின்னக் -குட்டி
முகமுங்கூட மின்னுதடி. 12

வண்டியும் வருகுதடி -குட்டி
வடமதுரை டேசனிலே
தந்திபோய்ப் பேசுதடி -குட்டி
தம்புசெட்டி மெத்தையிலே. 13

காளைநல்ல கறுப்புக்காளை -குட்டி
கண்ணாடி மயிலைக்காளை
சூடுவச்ச வெள்ளைக்காளை -குட்டி
சுத்துதடி மத்தியானம். 14

ஆறுசக்கரம் நூறுவண்டி -குட்டி
அழகால ரெயிலுவண்டி
மாடுகண்ணு இல்லாமதான் -குட்டி
மாயமாத்தான் ஓடுதடி. 15

பூத்தமரம் பூக்காதடி -குட்டி
பூவில்வண்டு ஏறாதாடி
கன்னிவந்து சேராவிட்டால் -என்
காதடைப்பும் தீராதடி. 16

செக்கச் சிவந்திருப்பாள் -குட்டி
செட்டிமகள் போலிருப்பாள்
லாரி முடிஞ்சிருப்பாள் -குட்டி
வந்திருப்பாள் சந்தைக்கடை. 17

முட்டாயி தேங்குலழு -குட்டி
முறுக்குலட்டுப் பூந்திவடை
தட்டாமே வாங்கித்தரேன் -குட்டி
தங்கமே நீ வாய்திறந்தால். 18

பாசம் பிடிக்கும்தண்ணி -குட்டி
பலபேர் எடுக்கும்தண்ணி
அத்தைமகள் எடுக்கும்தண்ணி -குட்டி
அத்தனையும் முத்தல்லவோ? 19

நீட்டினகால் மடக்காமல் நீ-அடி
நெடுமுக்காடை எடுக்காமலே
காட்டினாயே கருமூஞ்சியை-அடி
கருங்கழுதை மூஞ்சிபோலே. 20
--------

தங்கரத்தினமே

காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
கம்புசோளம் தினைவிதைத்துக்
காலைமாலை காட்டைக் காக்கத் -தங்கரத்தினமே
கண்விழித்திருந்தாளாம் -பொன்னுரத்தினமே. 1

அள்ளiஅள்ளi விதைத்த
அழமுத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த -தங்கரத்தினமே
மொந்தத்தினை சாகாதடி -பொன்னுரத்தினமே. 2

கறுப்பானை ஓடிவரக்
கள்ளரெல்லாம் தினைவிதைக்க
வெள்ளானை ஓடிவரத் -தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப் -பொன்னுரத்தினமே. 3

சின்னச்சின்ன வெற்றிலையாம்
சேட்டுக்கடை மிட்டாயாம்
மார்க்கட்டு மல்லிகைப்பூ -தங்கரத்தினமே
(உன்) கொண்டையிலே மணக்குதடி -பொன்னுரத்தினமே. 4

சாலையிலே ரெண்டுமரம்
சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் -தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம் -பொன்னுரத்தினமே. 5

எல்லோரும் கட்டும்வேட்டி
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி -தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி -பொன்னுரத்தினமே. 6

ஒத்தத்தலை நாகன்வந்து
ஒட்டாக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம் -தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப் -பொன்னுரத்தினமே. 7

தெய்வானையைக் காவல்வைத்தால்
தீஞ்சிடுமே தினைப்பயிருவள்ளiயைக்
காவல்வைத்தால் -தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை -பொன்னுரத்தினமே. 8

மூத்தண்ணன் பொண்சாதியை
மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை -தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம் -பொன்னுரத்தினமே. 9

சாய்ந்திருந்து கிளiவிரட்டச்
சாய்மானமும் பொன்னாலே
உட்கார்ந்து கிளiவிரட்டத் -தங்கரத்தினமே
முக்காலியும் பொன்னாலே -பொன்னுரத்தினமே. 10
-------
ராசாத்தி

ரோடு எல்லாம் கொழுத் தாடை
ரொம்பிக் கிடக்குதுபார் -ராசாத்தி
ரொம்பிக் கிடக்குதுபார். 1

நல்ல கரும்பு சட்டுக் கட்டா
நயமா விக்குதுபார் -ராசாத்தி
நயமா விக்குதுபார். 2

சர்க்கரை மிட்டாயும் பப்பர மிட்டாயும்
சந்தெல்லாம் விக்குதுபார் -ராசாத்தி
சந்தெல்லாம் விக்குதுபார். 3

கல்லுக் கண்டும் கடலை அவலும்
கணக்காய் விக்குதுபார் -ராசாத்தி
கணக்காய் விக்குதுபார். 4

கும்பல் கும்பலாய்க் குட்டைப் பிள்ளைகள்
குறுக்கே போறதைப்பார் -ராசாத்தி
குறுக்கே போறதைப்பார். 5

நேரு நேராய் நெட்டைப் பிள்ளைகள்
நின்று பாக்றதைப்பார் -ராசாத்தி
நின்று பாக்றதைப்பார். 6
நொண்டிப் பிள்ளையும் சண்டிப் பிள்ளையும்
நொண்டி அடிக்குதுபார் -ராசாத்தி
நொண்டி அடிக்குதுபார். 7

பால்குடி மறந்த பச்சைப் பிள்ளைகள்
பட்டம் விடுவதுபார் -ராசாத்தி
பட்டம் விடுவதுபார். 8

சாரட்டு வண்டியும் சட்கா வண்டியும்
சரியா நிக்குதுபார் -ராசாத்தி
சரியா நிக்குதுபார். 9

மல்லுக் கட்டுற மைனர் மார்கள்
மாத்தி மாத்தி வாராங்க -ராசாத்தி
மாத்தி மாத்தி வாராங்க. 10
-------------அஅ

அறுபத்து நாலு கலைகளாவன:

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

கடவுள் வாழ்த்துகொன்றை வேந்தன் செல்வன் அடியினைஎன்றும் ஏத்தித் தொழுவோம் யாமேஉயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தரும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழகு
13. அ·கமும் காசும் சிக்கெனத் தேடு

ஆத்திசூடி ( ஆசிரியர்: ஒளவையார் )

கடவுள் வாழ்த்துஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண்ணெழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்பூரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஒளவியம் பேசேல்
13. அ·கம் சுருக்கேல்உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல் லேல்
15. ஙப்போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம்பட உரை
18. இடம்பட வீடு எடல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையிற் கல்
30. அறனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்ககர வருக்கம்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப்பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. கெளவை அகற்றுசகர வருக்கம்
44. சக்கர நெறி நில்
45. சான்றோர் இனத்து இரு
46. சித்திரம் பேசேல்
47. சீர்மை மறவேல்
48. சுளிக்கச் சொல்லேல்
49. சூது விரும்பேல்
50. செய்வன திருந்தச் செய்
51. சேரிடம் அறிந்து சேர்
52. சையெனத் திரியேல்
53. சொற் சோர்வு படேல்
54. சோம்பித் திரியேல்தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி
56. தானமது விரும்பு
57. திருமாலுக்கு அடிமை செய்
58. தீவினை அகற்று
59. துன்பத்திற்கு இடம் கொடேல்
60. து¡க்கி வினை செய்
61. தெய்வம் இகழேல்
62. தேசத்தோடு ஒட்டி வாழ்
63. தையல் சொல் கேளேல்
64. தொன்மை மறவேல்
65. தோற்பன தொடரேல்நகர வருக்கம்
66. நன்மை கடைப் பிடி
67. நாடு ஒப்பன செய்
68. நிலையில் பிரியேல்
69. நீர் விளையாடேல்
70. நுண்மை நுகரேல்
71. நு¡ல் பல கல்
72. நெற்பயிர் விளைவு செய்
73. நேர்பட ஒழுகு
74. நைவினை நணுகேல்
75. நொய்ய உரையேல்
76. நோய்க்கு இடங் கொடேல்பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்78. பாம்பொடு பழகேல்
79. பிழைபடச் சொல்லேல்
80. பீடு பெற நில்
81. ப
82. பூமி திருந்தி உண்
83. பெரியாரைத் துணைக் கொள்
84. பேதைமை அகற்று
85. பையலோடு இணங்கேல்
86. பொருள்தனைப் போற்றி வாழ்
87. போர்த் தொழில் பூரியேல்மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்
89. மாற்றானுக்கு இடங் கொடேல்
90. மிகைபடச் சொல்லேல்
91. மீது¡ண் விரும்பேல்
92. முனைமுகத்து நில்லேல்
93. மூர்க்கரோடு இணங்கேல்
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
95. மேன்மக்கள் சொற் கேள்
96. மை விழியார் மனை அகல்
97. மொழிவது அறமொழி
98. மோகத்தை முனி

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்
100. வாது முற்கூறேல்
101. வித்தை விரும்பு
102. வீடுபெற நில்
103. உத்தமனாய் இரு
104. ஊருடன் கூடி வாழ்
105. வெட்டெனப் பேசேல்
106. வேண்டி வினை செயேல்1
07. வைகறைத் துயில் எழு
108. ஒன்னாரத் தேறேல்
109. ஓரம் சொல்லேல்


தென்னிந்தியாவின் உணவு வகைகளை எப்படி பரிமாற வேண்டும் என்பது குறித்து மின்னஞ்சலில் வந்தப் படம்...

1. உப்பு (Salt)
2. ஊறுகாய் (Pickles)
3. சட்னி பொடி (Chutney Powder)
4. கோசும்பரி (Green Gram Salad)
5. கோசும்பரி ( Bengal Gram Salad)
6. தேங்கய் சட்னி (Coconut Chutney)
7. பீன்… பல்யா (Fogath)
8. Gujje Pallya (Jack Fruit Fogath)
9. சித்ரண்ணம் (Lemon Rice)
10. அப்பளம் (Papad)
11. Sandige (Crispies)
12. இட்லி (Steamed Rice Cake)
13. அன்ன்ம் (Rice)
14. பருப்பு (Dal)
15. தயிர் வெங்காயம் (Raitha)
16. ரசம் (Rasam)
17. Uddinahittu (Black Gram Paste)
18. கத்ரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)
19. Menaskai (Sweet And Sour Gravy)
20. Goli Baje (Maida Fry)
21. அவியல் (Vegetabel Mix)
22. வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)
23. கத்ரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)
24. இனிப்பு (Sweet)
25. Gojjambade (Masalwada Curry)
26. இனிப்பு தேங்கய் சட்னி (Sweet Coconut Chapati)
27. கிச்சடி (Vegetable Upma)
28. Bharatha (Sour Ginger Gravy)
29. பாயசம் (Sweet)
30. தயிர் (Curds)
31. மோர் (Butter Milk)

நிறைய ஐட்டங்களுக்கு சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாததால் ஆங்கிலத்தில் அப்படியே பதிவிடுகிறேன்

Viji's உலகம்

Viji's உலகம்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. - குறள் 1281

நினைத்தவுடன் களிப்பக்கவும் பார்த்தவுடன் மகிழ்ச்சி கொள்ளவும் செய்யும் திறன் கள்ளுக்குக் கூட இல்லை. ஆனால் இந்தக் காமத்திற்கு உண்டு.

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். - குறள் 1120

மிகவும் மென்மையானது என்று சொல்லப்படும் அனிச்ச மலரும் அன்னத்தின் தூவியும் (தூவி - இறகு?), மாதர் பாதத்திற்கு முட்களையுடைய நெருஞ்சிப்பழம் போன்றதாகும்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. - குறள் 1114

இந்த அழகிய பெண்களைக் கண்டால் அழகிய குவளை மலரும் நாணித் தலை குனியுமாம், இப்பெண்ணின் கண்களுக்கு ஒப்பாக மாட்டோம் என்று.

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. - குறள் 1100

இருவருடைய கண்களும் பார்த்துக்கொள்ளும் போது பரிமாறிக் கொள்ளப்படும் உணர்ச்சிகளை விட வாய்ச்சொற்கள் எவ்வித பயனும் செய்து விட முடியாது.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். - குறள் 1084

இந்தப் பெண்ணின் கண்கள் மட்டும் கண்டவரின் உயிரினைத் தின்று விடும் போல் தோன்றுகிறதே.
posted by தேசாந்திரி at 9:53 AM

my photo


hi

my first post

hai friends today i created my blog spot




The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche