சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இது ரொம்ப நாள் முன்னாலேயே என் நண்பர் ஜேம்ஸிடமிருந்து கற்றது. எழுதனும்னு நினச்சி சோம்பேரித்தனதால இவ்ளோ நாளாகிடுச்சி, போனாவாரம் சன்டே மார்கட்ல 50 சென்ட்க்கு ப்பைனாப்பிள் பார்த்த உடனேயே வாங்கிட்டு வந்தாச்சி. சமையல்ல எக்ஸ்பிரிமெண்ட் செஞ்சு பார்க்க நண்பர்கள் இருக்கும் போது என்ன கவலை. இதோ புதுசா தயிர்க் குழம்பு( மோர்க் குழம்பு இல்லீங்கே இது )

சரி என்னேல்லாம் வேனும்:


கெட்டி தயிர்

பைனாப்பிள்

உப்பு

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

எண்ணை

காய்ந்த மிளகாய்

செய்முறை:

ரொம்ப சிம்பில்,

ஒரு வாணலியில் தேவையான எண்ணை விட்டு அதில் பொடியாக நறுகிய வெங்காயம் ,பச்சைமிளகாய்,இஞ்சி,காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பைனாபிள் துண்டுகளையும் தேவையான உப்பையும் சேர்த்து குறைந்த தணலில் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.



அதை கெட்டியான தயிரில் போட்டு கலக்கி உப்பு சரிபார்க்கவும்...சுவையான பைனாபிள் தயிர் குழம்பு தயார்.. :)

காரட் அல்வா

அன்பு நண்பர்களே,
கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இந்த புதிய ரெசிப்பி. ஒரு வார விடுமுறைல நிறைய காரட் ரூம்ல கிடந்தது நண்பர்களோட பேசிட்டு இருக்கும் போது ஒரு வட இந்திய நண்பன் சொன்னான் ஏன் நாம காரட் அல்வா செய்யாக் கூடாதுனு. ஜெர்மனில இருந்து இந்திய இனிப்பே பார்த்து ரொம்ப நாளாகிட்டதாலே உடனே செயல்ல இறங்கியாச்சி.

என்னேல்லாம் வேனும்:

காரட் - 1/2 கிலோ
பால் - 1 லிட்டர்(கொழுப்பு சத்து அதிகமான பால்)
சக்கரை- 1 கிலோ(ஒரு கிலோவும் தெவை இல்லை, உங்களுக்கு எவ்ளோ இனிப்பு புடிக்குமோ அவ்வளவு சேர்துக்கலாம்)
பால் பவுடர்- 1 பாக்கேட்(ரொம்ப முக்கியமில்லை , இது சேர்த்தால் கொஞ்சம் சீக்கிரமா அல்வா கெட்டியாகும்)

நெய்- தேவையான அளவு
முந்திரி பருப்பு
கிஸ்மிஸ்
ஏலக்காய் பொடி

செய்முறை:

கொஞசம் பொறுமை அவசியம் இதை செய்ய நீண்ட நேரம் எடுக்கும்.

1.முதலில் காரட்டைச் சுத்தம் செய்து துருவலாக்கிக் கொள்ளவும்.

2.ஒரு அடிப்பாகம் சற்று தடிமனான பாத்திரத்தை எடுத்து பாலை அதில் ஊற்றி நன்றாக கெட்டியாகுமாறு காய்ச்ச வேண்டும். பாலை சுடவைத்ததும் பொங்கி வர ஆரம்பிக்கும். இங்கே உங்கள எல்லா திறமைகளையும் காட்ட வேண்டி இருக்கும். பொங்கி வரும் போது அடுப்பில் தீயின் அளவைக் குறைக்கனும், இல்லனா பாத்திரதை அடுபிலிருந்து எடுத்திட்டு மீண்டும் வைக்கலாம். அப்படி இப்படினு தாஜா பண்ணி சுண்டக் காய்ச்சி எடுத்து வச்சிக்குங்க.

3. ஒரு பாத்திரதில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுங்கள்.

4. அதே பாத்திரத்தில் நெய் விட்டு காரட் துருவலை நன்றாக வதக்க வேண்டும். பின் சுண்டக் காய்ச்சிய பால் இதில் செர்த்து பால் பவுடரையும் கொட்டி அடிப் பிடிக்காமல் பொறுமையாக கிளரவேண்டும்.

5. நன்றாகா கெட்டியாக வரும் நேரம் சக்கரையும் செர்த்து கிளரிக் கொண்டே இருங்கள். அல்வா பதத்திர்க்கு வந்ததும் வருத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலகாய் பொடி போட்டு கிளரி இறக்கவும்.

சுவையான காரட் அல்வா ரெடி.

முக்கிய குறிப்பு:

ரொம்ப நேரமா கிளரியும் கெட்டி ஆகலயா? உங்க பொறுமை எல்லைய தொட்டுட்டீங்களா, கவலைய விடுங்க, இன்னும் கொஞ்சம் பால் செர்த்து கொதிக்க விட்டு இறக்குங்க "காரட் பாயசம் ரெடி" எப்பிடி எங்க ஐடியா?

வெண் பொங்கல்

வெண் பொங்கல்:-


ரொம்ம்ப நாள் இது ஹோட்ட்லில் மட்டும்தான் செய்ய முடியும் வீட்டுல கொஞ்சமா செஞ்சா அதே சுவை இருக்காது அப்படினு நினச்சிட்டு இருந்தேன். போனா வாரம் சனிக்கிழமை ஒரு அன்பு சகோதரி எளிமையா எப்படி பொங்கல் செய்வதுனு சுவையா சமைச்சி குடுத்தாங்க. ம்ம் சூப்ப்ரா வந்தது. இதோ உங்களுக்காக செய்முறை.



என்னேல்லாம் வேணும்?:



பச்சை அரிசி 200 கிராம்.


பாசிப் பருப்பு 50 கிராம்


சீரகம்

மிளகு

நெய்

முந்திரி

இஞ்சி

கறிவேப்பிலை






எப்படி செய்யனும்?

ரொம்ப எளிமையா செய்யலாம், முதலில் அரிசியை நன்றாக நீரில் கழுவி 1:2 அளவில் தண்ணீர் கலக்கனும். அதாவது அரிசி(200 கி)+பருப்பு(50 கி) ஒரு பங்கு எனில் அதற்கு இரண்டு மடங்கு தண்ணீர் + மேலும் அரை கிளாஸ் தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட வேண்டும். வழக்கமாக சாதம் வேக வைக்க விடும் விசிலை விட அதிகமா 5-6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும் அதாவது நன்கு குழைய விட வேண்டும். படத்தை பாருங்கள்.






குக்கரில் இருப்பதை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். பின் பிரையிங் பேனில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகமும் மிளகும் போட்டு பொன்நிறமாக வறுத்து சாதத்துடன் கொட்டி கிளற வேண்டும். பின் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து கொட்டவும். சுவையான வெண்பொங்கல் தயார். தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் சாம்பார், அல்லது கெட்டியான தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். மெது வடை கூட இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.



கொஸ்கொஸ்

இத எப்படி நம்ம ஊரு ஸ்டைல சமைக்கிறது?





கொஸ்கொஸ்"(koos koos(அமெரிக்கன் ஸ்டைல்), kuskus(பிரிட்டிஷ் ஸ்டைல்). எப்படி உங்களௌக்கு பிரியமோ அந்த பேர வச்சிக்கோங்க. இது நம்ம ஊரு ரவை போல இருக்கும். படத்தை பாருங்க.











நெட்ல தேடுனதுல இது மொராக்கோல இருந்து வந்ததுனு போட்டிருந்தாங்க. பெரும்பாலும் கோதுமை மாவில் செய்யப்படுகிறது,ஆனால் சில வேற விதமாகவும் பார்லி, மக்காசோள மாவு இதுலயும் செய்யப்படுகிறது. எல்லா சூப்பர் மார்கெட்லயும் கிடைக்கும். இத எப்படி நம்ம ஊரு ஸ்டைல சமைக்கிறது? அதுக்குத்தான் இந்த ரெசிப்பி.தனியா சமைத்து சாப்பிடறதுல கொடுமை என்னனா?, சனிக்கிழமை காலைல சமைக்கிறதுதான். 5 நாளும் காலைல ஆபீஸ் போற அவசரத்துல காஞ்ச ரொட்டிய ஜாம் தடவி உள்ள தள்ளிட்டு ஓடிடறதால ஒன்னும் தெரியாது. சனிக்கிழமை காலைல கூட இருக்கும் நண்பர்களும் லேட்டாதான் எழுந்துப்பாங்க, நமக்கிருக்கற ஆசைக்கு சூரியன் எழுந்துக்கும் போதே எந்திரிச்சு எதாவது செஞ்சு வச்சா ஆறி அவலா போயிடும். லேட்டா எழுந்து சமைக்கனும், சூடா சுவையா இருக்கனும். சீக்கிரமா வேலயும் முடியனும். இதயெல்லாம் பூர்த்தி செய்யற மாதிரினா மாகி நூடுல்ஸ் செய்யாலாம், ஆனா வாரா வாரம் இதுவே சாப்பிட்டா வெறுத்துப் போயிடும். உப்புமா செய்யலாம் , உப்புமா எனக்கு சாப்பிட பிடிக்கும்னு சொல்ற மக்கள தேடி பிடிக்க வேண்டியதா இருக்கு. இந்த பிரச்சினைய தீர்க்க தேடிப் புடிச்சதுதான் இந்த கொஸ்கொஸ். நீங்களும் முயற்சி பண்ணிப் பாருங்க.


என்னெல்லாம் வேணும்? எதெல்லாம் இருக்கோ அதெல்லாம் பயன்படுத்தலாம்.ஒரு சின்ன லிஸ்ட்.காய்கறி:-கேரட்-2பீன்ஸ்-200 கிராம்குட மிளகாய்-1பச்சை பட்டாணி-100 கிராம்.தக்காளி-2வெங்காயம்-2.உருளைக்கிழங்கு-1காளான் - 4பச்சை மிளகாய்-2கொஸ்கொஸ்-300 கிராம்மசாலாஸ்:-மிளகாய்ப்பொடிமஞ்சள் தூள்சாம்பார் பொடிமல்லித்தூள்கொத்த மல்லி தளை,கடுகு,உழுத்தம் பருப்பு,கறிவேப்பிலை.உப்பு
எப்படி செய்யனும்?
ரொம்ப சிம்பிள், முதல்ல கெஸ்கொஸ் எடுத்து 4 ஸ்பூன் எண்ணேய், அல்லது நெய் விட்டு நல்லா பொன்நிறமாக 5-10 நிமிசம் வறுத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி வைக்கவேண்டும். எல்லா காய்களயும் உங்களுக்கு விருப்பமான வடிவில் கட் பண்ணி வெச்சிக்கனும்.அப்புறமா ஒரு பிரையிங் பேன் வைத்து காய்ந்த்தது சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உழுந்து பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுள் கேரட்டை போட்டு நன்கு வதக்கவும், சிறிது நேரம் கழித்து பீண்ஸ்,குடமிளகாய், உருளைக்கிழங்கு, அப்புறம் பச்சை பட்டானி , வெங்காயம், தக்காளி பொட்டு எண்ணெயில் நன்றாக வதக்கவும். எவ்வளவு நேரம் வதக்கனும்னா உங்களுக்கு அரை வேக்காட்டு காய் பிடிக்கும்னா கொஞ்சநேரமே போதும், இல்லனா எல்லாக் காய்க்களும் நன்றாக வேகும் வரை வதக்கலாம். எப்படி தெரிஞுக்கிறது கேக்கறீங்களா, அப்படியே ஒரு துண்டு கேரட் எடுத்து சாப்பிட்டு பாருங்க. ஒரு தம்ப் ரூல் என்னனா மேலே இருக்கும் ஆர்டரில் போட்டிருந்தால் தக்காளி நல்லா வதங்கி, பேஸ்ட் மாதிரி மாறும் அதோட மோல் தோல் மட்டும் இருக்குமாறு ஆகும், அப்ப எல்லாக் காயுமே ஓரளவுக்கு வெந்து இருக்கும். இத செய்யும் போது அடில பிடிக்கற மாதிரி தோனுச்சினா ரெண்டு ஸ்பூன் எண்ணேய் உடனே ஊத்தனும். இப்ப தண்ணி ஊத்தனும் இதுல. எவ்வளவு? ஒரு கப் கொஸ்கொஸ் செய்ய இரண்டு கப் தண்ணி ஊத்தனும். நல்லா வதக்கிய காய்கறில தண்ணிய ஊத்தி மிளகாய் பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள் , சாம்பார் பொடி, வாசனையா வேணும்னா அதுக்கு தேவையானதுனு எல்லாம் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடனும். நல்லா கொதிச்சி வரும்போது வறுத்து வச்சிருக்கற கொஸ்கொஸ் கொஞ்சம் கொஞ்சமா கொட்டி தண்ணீர் சுண்டும் வரை கிளரி, இறக்கினால் சுவையான கொஸ்கொஸ் ரெடி. என்ன ரெசிப்பி ஓகேயா?.





பெருசா இது ஒன்னும் இல்லங்க. ரவா உப்புமா செய்யற மாதிரிதான் இதும். ரவைக்கு பதிலா கொஸ்கொஸ், கூட கொஞ்சம் வெஜிடபில்ஸ் அவ்வளவுதான். வேகமா செஞ்சா 30 நிமிசம். மெதுவா செஞ்சா ஒரு மணி நேரத்துல முடிச்சிடலாம். எப்படி சாபிடனும்? எதுக்கும் உங்க நலம் விரும்பிகள் கிட்ட சோதனை செஞ்சு பாத்தப்புறமா நீங்க சாப்பிடுங்க. :)

காளான்

மஷ்ரூம் கிரேவி (அட அதுதாங்க காளான் குழம்பு)

தேவையான பொருட்கள்:-
[img]http://i16.tinypic.com/4505083.jpg[/img]
காளான் - ஒரு பாக்கெட்(சுமாரா 500 கிராம்)
பெரிய வெங்காயம் -2
அரிசி மாவு- 3 ஸ்பூன்
சாம்பார் மசாலா-தேவையான அளவு.
பூண்டு- 2 பல்
எண்ணெய்,
கறிவேப்பிலை,கொத்தமல்லி தலை,
உப்பு மற்றும் சில optional items
செய்முறை:- வெங்காயத்தையும், காளானையும் பொடியாக நருக்கி கொள்ள வேண்டும். ஒரு கப்பில் அரிசிமாவை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
[img]http://i12.tinypic.com/30m4dgk.jpg[/img]
Image and video hosting by TinyPic
பிரையிங் பேனை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்னெய்விட்டு தாளித்து வெங்காயத்தப் போட்டு நன்றாகவதக்கவும், பின் வெட்டி வைத்துள்ள காளானை பொட்டு சாம்பார் பொடி சேர்க்கவும். சாம்பார் பொடி இல்லை எனில் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள், வாசனைபொருட்கள் என எல்லாவர்றயும் சேர்கவும், பார்ப்பதற்கு படத்தில் காட்டியுள்ளபடி ரத்த களறியாக இருக்க வேண்டும்.
[img]http://i13.tinypic.com/339kaxx.jpg[/img]
Image and video hosting by TinyPic
பின் அதில் கரைத்து வைத்துள்ள அரிசிமாவு கரைசலை ஊற்றி வேகவிடவும். நன்றாக 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தலை தூவி இறக்கவும். சூடான காளான் குழம்பு ரெடி. இடு சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு ஏற்றது.
[img]http://i12.tinypic.com/2qw1kkz.jpg[/img]
Image and video hosting by TinyPic

புதுசு இது

ஆப்பில் சாலட்....?
தேவையானபொருட்கள்:-

ஆப்பில்- 2( Green apple) (green apple கிடைக்கவில்லை என்றால் நன்கு பழுக்காத சாதாரண ஆப்பில் உபயோகிக்கலாம்)

பெரிய வெங்காயம்-2கெட்டியான

தயிர்-ஒரு கப் (புளிப்பு இல்லாத தயிராக எடுத்துக் கொள்ளவும்)இஞ்சி- சிரிதளவு(விருப்பப் பட்டால் மட்டும்)

கடுகு- 4 டேபில் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

ஆப்பில் பழ தோல் உரித்து மிகச்சிறியதாக மாதுளம்பழத்தில் இருக்கும் முத்து size ல் நறுக்கவும்.

பெரிய வெங்காயத்தை எவ்வளவு சின்னதாக நறுக்க முடியுமோ அவ்வளவு சின்னதாக cut பன்ன்னவும்.அதே போல் இஞ்சியையும் கட் பன்ன வேண்டும்.

கடுகை மிக்சியில் பச்சையாக போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும். மிக்சி இல்லை எனில் ஒரு பாலித்தீன் கவரில் வைத்து பூரி உருட்டும் கட்டையால் கடுகை நசுக்கி எடுக்கவும்.

இப்பொழுது ஒருகப்பில் தயிரை எடுத்து அதனுள் வெட்டிய ஆப்பில், வெங்காயம், இஞ்சி, கடுகு, உப்பு சேர்த்து கலக்கினால் அருமையான சாலட் ரெடி.

ஆப்பில் பழ தோலை உரித்து விடுவதால் சாப்பிடுபவர்களுக்கு இது ஆப்பில் என்று தெரியாது. ஒரு புதுவித சுவயாக இருக்கும்.

vann kozhi

வான் கோழி பிரை ஒரு முன்குறிப்பு:- இது பேச்சிலர்ஸ் சமையல் டிப். அதனால ஏன் இந்த பொருட்கள் எல்லாம் தேவை, ஏன் இப்படி செய்ய வேண்டும் என ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம். இப்படியும் செய்யலாம். தேவையான பொருட்கள்:- வான்கோழி கறி ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்ல வான்கோழி மீட் எலும்பில்லாம கட் பண்ணின பேக் கிடைக்கும்) பெரிய வெங்காயம்-2 இஞ்சி, பூண்டு நறுக்கியது- சிரிதளவு(இஞ்சி பூண்டு பேஸ்ட் இருந்தால் உபயோகிக்கலாம்) சைனா சாஸ்- 2 ஸ்பூன்.(சாஸ் இருந்தா அது மட்டும் போதும் , இல்லனா சிக்கன் பிரைக்கு என்ன வாசனப் பொருள் சேக்கனுமோ அதெல்லாம் இதுலயும் உபயோகிக்கலாம்) சிக்கன் மசாலா- 2 ஸ்பூன்உப்பு தெவையான அளவு.கறிவேப்பிலை, கொத்தமல்லி தளை இருந்தா உபயொகப்படுத்தலாம் இல்லனா கொத்தமைல்லி , கறிவேப்பிலை பொடி உபயோகப் படுத்தலாம்.செய்முறை:- முதலில் வெங்காயம் இஞ்சி பூண்டை படத்தில் காட்டியுள்ள படி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்Image and video hosting by TinyPic[img]http://i10.tinypic.com/433k2mt.jpg[/img] வான்கோழி இறைச்சியை சிறு துண்டுகலாக நறுக்கவும். கடையில் அந்த இறச்சி பிரட் துண்டுகள் போல கிடைக்கும், அதை அப்படியே சிறு துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.அடுப்பில் பிரையிங் பேன் வைத்து சூடக்கி அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கரிவேப்பிலை போட்டு அதனுடன் வெட்டிய வெங்காயம், இஞ்சி பூண்டு மசாலா items சேர்த்து வதக்கவும். சிறிது நேரத்திற்குப் பின் வான்கோழி இறச்சியையும் சேர்த்து நன்றாக மிதமான சூட்டில் வ்தக்கவேண்டும்.Image and video hosting by TinyPic[img]http://i12.tinypic.com/2dm59if.jpg[/img]சிறிது நேரம் கழித்து படத்தில் காட்டிய பக்குவதிற்கு வ்ந்தவுடன் அதில் சைனா சாஸ் சேர்க்க வேண்டும்.பின் மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடம் வறுத்து கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இரக்கவும். இதுவே கிரேவி போல வேண்டுமெனில் சிறிது அர்சி மற்றும் சோள மாவு தண்ணீரில் கலந்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடலாம்.Image and video hosting by TinyPic[img]http://i10.tinypic.com/2hp3vrd.jpg[/img]

சண்டெ ஸ்பெசல் "ஜேம்ஸ்" சிக்கன்

சண்டெ ஸ்பெசல் "ஜேம்ஸ்" சிக்கன்:-பெயர்க்காரணம் கடைசில மக்களே.சிக்கன் செய்ய ஒரு எளிமையான ரெசிப்பிதேவையானவை:- சிக்கன் லெக் பீஸ் -2 ( இங்க எங்க ஊரு சண்டே மார்க்கெட்ல ரொம்ப கம்மி வெலைல கெடைக்குது. இல்லனா சூப்பர் மார்கெட்லயும் ஒரு பேக் சிக்கன் வாங்கிக்கலாம்)பெரிய வெங்காயம்- 3தக்காளி-2இஞ்சி-1 துண்டுபூண்டு- 4 பல்கொத்தமல்லி, கறிவேப்பிலை- தெவையான அளவு.உப்பு.சிக்கன் மசாலா-(சிக்கன் மசாலா இல்லை என்றால் மிளகாய்த்தூள், பட்டை, கிரம்பு, ஏலக்காய், பிரியானி செய்ய பயன்படும் வசனைப் பொருட்களை உபயோகிக்கலாம்)செய்முறை:- இதனுடன் படங்களும் இணைக்கப் பட்டுள்ளது, எதேனும் சந்தேகம் இருந்தால் படத்தை ரெபர் செய்யவும்.முதலில் தக்காளி, வெங்காயம் இவற்றை நீள வாக்கைல் நறுக்கவும்.இஞ்சி , பூண்டை சிறு சிறு துண்டுகளாக்கவும். [img]http://i11.tinypic.com/34q22pu.jpg[/img]அடுப்பில் பிரையிங் பேனை வைத்து(செய்முறையில் கூரிய வரிசைப்படி பொருட்களை போட வேண்டும் அதைப்பொருத்துதான் தான் இந்த சிக்கனின் சுவை அமையும்.) சூடானதும் நெய் 4 மேஜைக்கரண்டி ஊற்ற வேண்டும்(எண்ணெய் அல்லது வெண்ணெயும் உபயோகிக்கலாம்)பின் அதில் வெட்டி வத்துள்ள இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும், பின் அதில் சிக்கல் மசாலா 4 ஸ்பூண் போட்டு வதக்கவும்( சிக்கன் மசாலா இல்லை எனில் மிளகாய்த்தூள், பட்டை, கிரம்பு, ஏலக்காய், பிரியானி செய்ய பயன்படும் வசனைப் பொருட்களை போட்டு வ்தக்கவும்), சிறிது நேரம் களித்து [img]http://i17.tinypic.com/40kykwk.jpg[/img]வெங்காயத்தை இதனுடன் சேர்த்து வதக்கவும். படத்தில் காட்டிய பக்குவம் வந்ததும் அத்னுள் தக்காளியை போட்டு வ்தக்க வேண்டும்.இவை எல்லாம் நன்றாக வ்தங்கிய பின் சிறுதுண்டுகளாக வெட்டிய சிக்கனை சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது தேவையான உப்பையும் சேர்க்கவேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கவேண்டியது இல்லை சிக்கனில் உள்ள ஈரப்பதமே போதும்.பிரையிங் பேனை ஒரு அகலமான மூடி கொண்டு மூடி வைத்து சிறிது நெரத்துக்கு ஒரு முறை அடியில் பிடிக்காமல் சிக்கனை புரட்டி விட வேண்டும். நன்றாக வெந்ததும் கொத்தம்ல்லி இலை தூவி இறக்கவேண்டும். இறக்குவதற்க்கு சிறிது முன்பு தேங்காய்ப்பால் இருந்தால் சிறிது சேர்க்கலாம் அது சுவையை மேலும் கூட்டும். வேலை செய்ய ஊருவிட்டு ஊரு வந்து கஸ்டப்படும் மக்களே இது உங்களுக்காக ஒரு எளிய சிக்கன் செய்முறை. செஞ்சி சாப்பிட்டு பாத்துட்டுசொல்லுங்க. ஜேம்ஸ் சிக்கன்னு பேரு வச்சதுக்கு காரணம் என்னுடைய நண்பர் ஜேம்ஸ்தான் இந்த செய்முறையை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதனால் இதற்க்கு அவர் பெயர்.




The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche