வெண் பொங்கல்:-
ரொம்ம்ப நாள் இது ஹோட்ட்லில் மட்டும்தான் செய்ய முடியும் வீட்டுல கொஞ்சமா செஞ்சா அதே சுவை இருக்காது அப்படினு நினச்சிட்டு இருந்தேன். போனா வாரம் சனிக்கிழமை ஒரு அன்பு சகோதரி எளிமையா எப்படி பொங்கல் செய்வதுனு சுவையா சமைச்சி குடுத்தாங்க. ம்ம் சூப்ப்ரா வந்தது. இதோ உங்களுக்காக செய்முறை.
என்னேல்லாம் வேணும்?:
பச்சை அரிசி 200 கிராம்.
பாசிப் பருப்பு 50 கிராம்
சீரகம்
மிளகு
நெய்
முந்திரி
இஞ்சி
கறிவேப்பிலை
எப்படி செய்யனும்?
ரொம்ப எளிமையா செய்யலாம், முதலில் அரிசியை நன்றாக நீரில் கழுவி 1:2 அளவில் தண்ணீர் கலக்கனும். அதாவது அரிசி(200 கி)+பருப்பு(50 கி) ஒரு பங்கு எனில் அதற்கு இரண்டு மடங்கு தண்ணீர் + மேலும் அரை கிளாஸ் தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட வேண்டும். வழக்கமாக சாதம் வேக வைக்க விடும் விசிலை விட அதிகமா 5-6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும் அதாவது நன்கு குழைய விட வேண்டும். படத்தை பாருங்கள்.
குக்கரில் இருப்பதை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். பின் பிரையிங் பேனில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகமும் மிளகும் போட்டு பொன்நிறமாக வறுத்து சாதத்துடன் கொட்டி கிளற வேண்டும். பின் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து கொட்டவும். சுவையான வெண்பொங்கல் தயார். தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் சாம்பார், அல்லது கெட்டியான தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். மெது வடை கூட இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
லேபிள்கள்: சமையல்
12 Comments:
Friedrich Nietzsche
- pepper is soft so you can eat with ur pongal. otherwise it will be little hard so no one will throw that.
-pongal will be very soft you don't need to give 5-6 instead 4 is enough.
அரிசியோடு பருப்பை எப்ப சேர்க்கணுமாம்?
அந்தப் பருப்பைக் கொஞ்சம் பச்சை வாசனை போக ஒரு ரெண்டு நிமிஷம்
வெறும் வாணலியில் வறுத்துப் போட்டுக்குங்க.
தொட்டுக்க மெது'வடை'ன்னு சொன்னது ரொம்பப் பிடிச்சுப்போச்சு:-)
1 பொங்கல், 2 வடை - பார்சல் அணுப்புங்க.
படிச்சவுடன் பசிக்குது.
i will do, otherway, like pour ghee, in that add cumin seed, pepper, ginger, then cashew nut, if you do so.
- pepper is soft so you can eat with ur pongal. otherwise it will be little hard so no one will throw that.
-pongal will be very soft you don't need to give 5-6 instead 4 is enough. //
Aravindaan Thanks for your visit and suggestions. Next time i will try ur method.
எப்படியோ 'பொங்கி'ட்டீங்க:-)))))
அரிசியோடு பருப்பை எப்ப சேர்க்கணுமாம்?
அந்தப் பருப்பைக் கொஞ்சம் பச்சை வாசனை போக ஒரு ரெண்டு நிமிஷம்
வெறும் வாணலியில் வறுத்துப் போட்டுக்குங்க.//
துளசி கோபால் மேடம் உங்க டிப்ஸ்க்கும் வருகைக்கும் நன்றி.
மாஸ்டர்,
1 பொங்கல், 2 வடை - பார்சல் அணுப்புங்க.
படிச்சவுடன் பசிக்குது.//
டி ஹெச் எல் கூரியர்ல அனுப்பினா போதுமா?
Superb Viji,,,,I ll try & let you know about it :)
//
All the best. better invite one friend for testing :)
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது சென்று பார்வையிட.இதோ.
http://blogintamil.blogspot.com/2013/11/blog-post.html?showComment=1383269378727#c4882904206101416278
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்