ப்பைனாப்பிள் தயிர்க் குழம்பு

இது ரொம்ப நாள் முன்னாலேயே என் நண்பர் ஜேம்ஸிடமிருந்து கற்றது. எழுதனும்னு நினச்சி சோம்பேரித்தனதால இவ்ளோ நாளாகிடுச்சி, போனாவாரம் சன்டே மார்கட்ல 50 சென்ட்க்கு ப்பைனாப்பிள் பார்த்த உடனேயே வாங்கிட்டு வந்தாச்சி. சமையல்ல எக்ஸ்பிரிமெண்ட் செஞ்சு பார்க்க நண்பர்கள் இருக்கும் போது என்ன கவலை. இதோ புதுசா தயிர்க் குழம்பு( மோர்க் குழம்பு இல்லீங்கே இது )

சரி என்னேல்லாம் வேனும்:


கெட்டி தயிர்

பைனாப்பிள்

உப்பு

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

எண்ணை

காய்ந்த மிளகாய்

செய்முறை:

ரொம்ப சிம்பில்,

ஒரு வாணலியில் தேவையான எண்ணை விட்டு அதில் பொடியாக நறுகிய வெங்காயம் ,பச்சைமிளகாய்,இஞ்சி,காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பைனாபிள் துண்டுகளையும் தேவையான உப்பையும் சேர்த்து குறைந்த தணலில் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.



அதை கெட்டியான தயிரில் போட்டு கலக்கி உப்பு சரிபார்க்கவும்...சுவையான பைனாபிள் தயிர் குழம்பு தயார்.. :)

7 Comments:

  1. ')) said...
    செஞ்சு சாப்பிட்டுட்டு வர்றேன்
    ')) said...
    பைனாப்பிள் பச்சடின்னு நாங்க சொல்வோம்.

    சரி..விடுங்க. பெயரில் என்ன இருக்கு?:-))))
    ')) said...
    துளசி கோபால் said...
    பைனாப்பிள் பச்சடின்னு நாங்க சொல்வோம்.

    சரி..விடுங்க. பெயரில் என்ன இருக்கு?:-))))


    :)

    ஓ என்ன பேருனா என்னா சாபிடமாதிரி இருந்தா ஓகேதானே.
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    ')) said...
    // முரளிகண்ணன் said...
    செஞ்சு சாப்பிட்டுட்டு வர்றேன்//

    சரீங்க முரளி ::)
    ')) said...
    பைனாப்பிள் ரசம்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கேன்.இது படிக்கும்போதே நல்லா இருக்கும்ணு தோணுது.
    ')) said...
    படிச்சா நல்லா இருக்கும்போலத்தான் இருக்கு.இதுவரை பைனாப்பிள் ரசம் தான் கேள்விப்பட்டிருக்கேன்.சில சமயம் காய்கறியை விட பைனாப்பிள் மலிவா இருக்கு. அப்ப இதைப் பண்ணிப்பார்க்கலாம்.
    ')) said...
    //ராஜசுப்ரமணியன் S கூறியது...
    படிச்சா நல்லா இருக்கும்போலத்தான் இருக்கு.இதுவரை பைனாப்பிள் ரசம் தான் கேள்விப்பட்டிருக்கேன்.சில சமயம் காய்கறியை விட பைனாப்பிள் மலிவா இருக்கு. அப்ப இதைப் பண்ணிப்பார்க்கலாம்.

    5:29 AM//

    இதை செய்து சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுனு

Post a Comment






The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche