காரட் அல்வா

அன்பு நண்பர்களே,
கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இந்த புதிய ரெசிப்பி. ஒரு வார விடுமுறைல நிறைய காரட் ரூம்ல கிடந்தது நண்பர்களோட பேசிட்டு இருக்கும் போது ஒரு வட இந்திய நண்பன் சொன்னான் ஏன் நாம காரட் அல்வா செய்யாக் கூடாதுனு. ஜெர்மனில இருந்து இந்திய இனிப்பே பார்த்து ரொம்ப நாளாகிட்டதாலே உடனே செயல்ல இறங்கியாச்சி.

என்னேல்லாம் வேனும்:

காரட் - 1/2 கிலோ
பால் - 1 லிட்டர்(கொழுப்பு சத்து அதிகமான பால்)
சக்கரை- 1 கிலோ(ஒரு கிலோவும் தெவை இல்லை, உங்களுக்கு எவ்ளோ இனிப்பு புடிக்குமோ அவ்வளவு சேர்துக்கலாம்)
பால் பவுடர்- 1 பாக்கேட்(ரொம்ப முக்கியமில்லை , இது சேர்த்தால் கொஞ்சம் சீக்கிரமா அல்வா கெட்டியாகும்)

நெய்- தேவையான அளவு
முந்திரி பருப்பு
கிஸ்மிஸ்
ஏலக்காய் பொடி

செய்முறை:

கொஞசம் பொறுமை அவசியம் இதை செய்ய நீண்ட நேரம் எடுக்கும்.

1.முதலில் காரட்டைச் சுத்தம் செய்து துருவலாக்கிக் கொள்ளவும்.

2.ஒரு அடிப்பாகம் சற்று தடிமனான பாத்திரத்தை எடுத்து பாலை அதில் ஊற்றி நன்றாக கெட்டியாகுமாறு காய்ச்ச வேண்டும். பாலை சுடவைத்ததும் பொங்கி வர ஆரம்பிக்கும். இங்கே உங்கள எல்லா திறமைகளையும் காட்ட வேண்டி இருக்கும். பொங்கி வரும் போது அடுப்பில் தீயின் அளவைக் குறைக்கனும், இல்லனா பாத்திரதை அடுபிலிருந்து எடுத்திட்டு மீண்டும் வைக்கலாம். அப்படி இப்படினு தாஜா பண்ணி சுண்டக் காய்ச்சி எடுத்து வச்சிக்குங்க.

3. ஒரு பாத்திரதில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுங்கள்.

4. அதே பாத்திரத்தில் நெய் விட்டு காரட் துருவலை நன்றாக வதக்க வேண்டும். பின் சுண்டக் காய்ச்சிய பால் இதில் செர்த்து பால் பவுடரையும் கொட்டி அடிப் பிடிக்காமல் பொறுமையாக கிளரவேண்டும்.

5. நன்றாகா கெட்டியாக வரும் நேரம் சக்கரையும் செர்த்து கிளரிக் கொண்டே இருங்கள். அல்வா பதத்திர்க்கு வந்ததும் வருத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலகாய் பொடி போட்டு கிளரி இறக்கவும்.

சுவையான காரட் அல்வா ரெடி.

முக்கிய குறிப்பு:

ரொம்ப நேரமா கிளரியும் கெட்டி ஆகலயா? உங்க பொறுமை எல்லைய தொட்டுட்டீங்களா, கவலைய விடுங்க, இன்னும் கொஞ்சம் பால் செர்த்து கொதிக்க விட்டு இறக்குங்க "காரட் பாயசம் ரெடி" எப்பிடி எங்க ஐடியா?

9 Comments:

  1. ')) said...
    ஜெர்மனியில் இருக்கீங்களா? அப்ப எதுக்கு இப்படி மெனக்கெடணும்.

    சூப்பர் மார்கெட்டில் 'எவாப்பரேட்டட் மில்க்' டின்னில் கிடைக்கும். அதை ஒன்னு வாங்கிக்குங்க.

    துருவுன கேரட்டை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு கொஞ்சமா மேலே சொன்ன பாலைச் சேர்த்து அஞ்சு நிமிசம் 100 பவர்லே வச்சு எடுத்துக்குங்க.

    முந்திரியெல்லாம் நீங்க சொன்னதுபோல வறுத்து எடுத்துவச்சுக்கிட்டு அதே பாத்திரத்தில்
    வெந்த கேரட்டைப் போட்டு மீதி டின்னில் இருக்கும் பால் சேர்த்து கிளறிக்கிட்டே இருங்க. சீக்கிரம் அல்வா பதம் வந்துரும்

    பாக்கி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன? :-))))
    ')) said...
    உங்களுக்கு தெரிந்த விடயங்களை எல்லோரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் உங்களிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றோம்.
    ')) said...
    // துளசி கோபால் said...
    ஜெர்மனியில் இருக்கீங்களா? அப்ப எதுக்கு இப்படி மெனக்கெடணும்.

    சூப்பர் மார்கெட்டில் 'எவாப்பரேட்டட் மில்க்' டின்னில் கிடைக்கும். அதை ஒன்னு வாங்கிக்குங்க.

    துருவுன கேரட்டை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு கொஞ்சமா மேலே சொன்ன பாலைச் சேர்த்து அஞ்சு நிமிசம் 100 பவர்லே வச்சு எடுத்துக்குங்க.

    முந்திரியெல்லாம் நீங்க சொன்னதுபோல வறுத்து எடுத்துவச்சுக்கிட்டு அதே பாத்திரத்தில்
    வெந்த கேரட்டைப் போட்டு மீதி டின்னில் இருக்கும் பால் சேர்த்து கிளறிக்கிட்டே இருங்க. சீக்கிரம் அல்வா பதம் வந்துரும்

    பாக்கி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன? :-))))

    //

    மிக்க நன்றி உங்கள் வருகை, கமண்ட் & மைக்ரோ வேவ் செய்முறைக்கும். கம்பெனி குடுத்த அப்பார்ட்மெண்ட் வாசம், மைக்ரோவேவ் ஒவன் இல்ல, எலக்ட்ரிக் ஓவன் மட்டும்தான் கிச்சன்ல இருக்கு. அதனாலதான் இந்த மெனக்கெடுதல் ஹி ஹி :)
    ')) said...
    //கரவைக்குரல் said...
    உங்களுக்கு தெரிந்த விடயங்களை எல்லோரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் உங்களிடமிருந்து இன்னும் நிறையவே எதிர்பார்க்கின்றோம்.//

    நன்றி கரவைக்குரல்.
    ')) said...
    மின்சாரம்.... என்ன ஆயிற்று??
    :-))
    ')) said...
    வாங்க குமார். நலமா?
    மின்சாரம் எழுதனும். கொஞ்சம் வேலைப்ப்ளு, கொஞ்சம் சோம்பல். இனிமேல் வாரத்துக்கு ஒரு பதிவாவது மின்சாரம் பகுதில நீங்க எதிர்பார்க்கலாம் :)
    ')) said...
    ரெசிப்பி நல்லா இருக்கு. செய்ய முடியுமான்னு தெரியல்ல. துறை சார்ந்த பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்(மின்சரம்)
    ')) said...
    //முரளிகண்ணன் said...
    ரெசிப்பி நல்லா இருக்கு. செய்ய முடியுமான்னு தெரியல்ல. துறை சார்ந்த பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்(மின்சரம்)//

    முரளி சார் வீட்டுல செய்யச் சொல்லுங்க. ஐ ஐ டி கேம்பசயே மணக்க வெச்சுடலாம். :),வருகைக்கு நன்றி துறைசார்ந்த பதிவுகள நிச்சயமா இனி நிறைய எழுதுகிறேன்.
    ')) said...
    கேரட் அல்வா மைக்ரோ வேவ்ல செய்யறது எப்படின்னு பார்க்க கூகுள் சர்ச் பண்ணி தற்செயலா இந்த பதிவை வாசிச்சேன். செய்முறைய விட எழுதியிருந்தது ரொம்ப பிடிச்சது. என்னையும் அறியாமல் புன்னகைக்க வைத்தது நீங்க எழுதியிருந்த சில வரிகள். புதுவருடத்தில் படித்து ரசித்த முதல் பதிவு இதுதான்.

    வாழ்த்துகள் !

    01.01.2011

Post a Comment






The man of knowledge must be able not only to love his enemies but also to hate his friends.


Friedrich Nietzsche