இது ரொம்ப நாள் முன்னாலேயே என் நண்பர் ஜேம்ஸிடமிருந்து கற்றது. எழுதனும்னு நினச்சி சோம்பேரித்தனதால இவ்ளோ நாளாகிடுச்சி, போனாவாரம் சன்டே மார்கட்ல 50 சென்ட்க்கு ப்பைனாப்பிள் பார்த்த உடனேயே வாங்கிட்டு வந்தாச்சி. சமையல்ல எக்ஸ்பிரிமெண்ட் செஞ்சு பார்க்க நண்பர்கள் இருக்கும் போது என்ன கவலை. இதோ புதுசா தயிர்க் குழம்பு( மோர்க் குழம்பு இல்லீங்கே இது )
சரி என்னேல்லாம் வேனும்:
பைனாப்பிள்
உப்பு
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
எண்ணை
காய்ந்த மிளகாய்
செய்முறை:
ரொம்ப சிம்பில்,
ஒரு வாணலியில் தேவையான எண்ணை விட்டு அதில் பொடியாக நறுகிய வெங்காயம் ,பச்சைமிளகாய்,இஞ்சி,காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பைனாபிள் துண்டுகளையும் தேவையான உப்பையும் சேர்த்து குறைந்த தணலில் சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.
அதை கெட்டியான தயிரில் போட்டு கலக்கி உப்பு சரிபார்க்கவும்...சுவையான பைனாபிள் தயிர் குழம்பு தயார்.. :)
லேபிள்கள்: சமையல்
அன்பு நண்பர்களே,
கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இந்த புதிய ரெசிப்பி. ஒரு வார விடுமுறைல நிறைய காரட் ரூம்ல கிடந்தது நண்பர்களோட பேசிட்டு இருக்கும் போது ஒரு வட இந்திய நண்பன் சொன்னான் ஏன் நாம காரட் அல்வா செய்யாக் கூடாதுனு. ஜெர்மனில இருந்து இந்திய இனிப்பே பார்த்து ரொம்ப நாளாகிட்டதாலே உடனே செயல்ல இறங்கியாச்சி.
என்னேல்லாம் வேனும்:
காரட் - 1/2 கிலோ
பால் - 1 லிட்டர்(கொழுப்பு சத்து அதிகமான பால்)
சக்கரை- 1 கிலோ(ஒரு கிலோவும் தெவை இல்லை, உங்களுக்கு எவ்ளோ இனிப்பு புடிக்குமோ அவ்வளவு சேர்துக்கலாம்)
பால் பவுடர்- 1 பாக்கேட்(ரொம்ப முக்கியமில்லை , இது சேர்த்தால் கொஞ்சம் சீக்கிரமா அல்வா கெட்டியாகும்)
நெய்- தேவையான அளவு
முந்திரி பருப்பு
கிஸ்மிஸ்
ஏலக்காய் பொடி
செய்முறை:
கொஞசம் பொறுமை அவசியம் இதை செய்ய நீண்ட நேரம் எடுக்கும்.
1.முதலில் காரட்டைச் சுத்தம் செய்து துருவலாக்கிக் கொள்ளவும்.
2.ஒரு அடிப்பாகம் சற்று தடிமனான பாத்திரத்தை எடுத்து பாலை அதில் ஊற்றி நன்றாக கெட்டியாகுமாறு காய்ச்ச வேண்டும். பாலை சுடவைத்ததும் பொங்கி வர ஆரம்பிக்கும். இங்கே உங்கள எல்லா திறமைகளையும் காட்ட வேண்டி இருக்கும். பொங்கி வரும் போது அடுப்பில் தீயின் அளவைக் குறைக்கனும், இல்லனா பாத்திரதை அடுபிலிருந்து எடுத்திட்டு மீண்டும் வைக்கலாம். அப்படி இப்படினு தாஜா பண்ணி சுண்டக் காய்ச்சி எடுத்து வச்சிக்குங்க.
3. ஒரு பாத்திரதில் நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுங்கள்.
4. அதே பாத்திரத்தில் நெய் விட்டு காரட் துருவலை நன்றாக வதக்க வேண்டும். பின் சுண்டக் காய்ச்சிய பால் இதில் செர்த்து பால் பவுடரையும் கொட்டி அடிப் பிடிக்காமல் பொறுமையாக கிளரவேண்டும்.
5. நன்றாகா கெட்டியாக வரும் நேரம் சக்கரையும் செர்த்து கிளரிக் கொண்டே இருங்கள். அல்வா பதத்திர்க்கு வந்ததும் வருத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலகாய் பொடி போட்டு கிளரி இறக்கவும்.
சுவையான காரட் அல்வா ரெடி.
முக்கிய குறிப்பு:
ரொம்ப நேரமா கிளரியும் கெட்டி ஆகலயா? உங்க பொறுமை எல்லைய தொட்டுட்டீங்களா, கவலைய விடுங்க, இன்னும் கொஞ்சம் பால் செர்த்து கொதிக்க விட்டு இறக்குங்க "காரட் பாயசம் ரெடி" எப்பிடி எங்க ஐடியா?
லேபிள்கள்: சமையல்
Friedrich Nietzsche